அமெரிக்காவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிதி நெருக்கடி மற்றும் அதீத நஷ்டம் காரணமாகவும் இந்தியாவில் தனது உற்பத்தியை மொத்தமாக நிறுத்த முடிவு செய்தது. இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு ஒன்றை டாடா குழுமத்திற்கும் விற்கப்பட்ட நிலையில் சென்னையில் இருக்கும் தொழிற்சாலை மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்தத் தொழிற்சாலையை விற்பனை செய்ய ஃபோர்ட் நிர்வாகம் தனியாகவும், தமிழ்நாடு அரசு உதவி உடனும் பல நிறுவனங்களிடம் பேசிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு JSW குரூப்-க்கு விற்க முடிவு செய்யப்பட்டது. இதன் பின்பு தான் JSW குரூப் சீனாவின் SAIC நிறுவனத்திடம் MG மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்திடம் பெரும் பங்குகளை வாங்கியது.

ஆனால் இப்போது போர்ட் நிர்வாகம் சென்னை தொழிற்சாலையை விற்க விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான Ford மீண்டும் இந்தியாவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகின் 3வது மிகப்பெரிய வாகனச் சந்தை, இந்தியாவில் வாகன உற்பத்தியும் சரி, வாகன விற்பனையும் சரி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதுகுறித்து ஃபோர்ட் நிர்வாகம் கூறுகையில் சென்னை தொழிற்சாலையை வைத்து மாற்றுத் திட்டத்தைத் தீட்ட உள்ளோம், இத்திட்டம் குறித்து இப்போது கூற முடியாது என விளக்கம் கொடுத்துள்ளது. சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையைக் கைப்பற்றுவது குறித்து JSW அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதால் இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சென்னையில் மறைமலை நகரில் அமைந்திருக்கும் ஃபோர்டு தொழிற்சாலை சுமார் 300 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் வருடத்திற்கு 1,50,000 கார்களையும், 3.40 லட்சம் இன்ஜின்களையும் தயாரிக்கும் திறன் கொண்டு உள்ளது. ஜூலை 2022ல் இருந்து ஃபோர்ட் நிர்வாகம் இத்தொழிற்சாலையை மூடி வைத்துள்ளது.
ஃபோர்ட் நிறுவனத்திடம் JSW மட்டும் ஏமாறவில்லை, 2019ல் ஃபோர்ட் இந்திய வர்த்தகத்தில் கூட்டணி உருவாக்கவும், தனது தொழிற்சாலையைப் பயன்படுத்தி உற்பத்தியை மேம்படுத்த மஹிந்திரா உடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் ஜனவரி 2021ல் உடைக்கப்பட்டு ஃபோர்ட் இந்தியாவில் தனியாகவே செயல்பட முடிவு செய்து ஜூலை 2022ல் மொத்த தொழிற்சாலையை மூடியது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications