ரஷ்யா உக்ரைன் மத்தியிலான போர் இரு நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தாண்டி உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய்-யில் துவங்கி வைரம், உணவு பொருட்கள் வரையில் அனைத்து முக்கியமான வர்த்தக பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது, தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் மேற்கத்திய நாடுகளின் தடையின் காரணமாக ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வெளியேற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தான் ரஷ்யா-வில் இருந்து சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையின் முக்கியமான இரு நிறுவனங்கள் லாபத்துடன் வெளியேறியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய நாளில் இருந்து மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்து பல விதமான தடைகளை விதித்த காரணத்தால் உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் ரஷ்யாவுடன் பணப் பரிமாற்றம் முதல் ஏற்றுமதி, இறக்குமதி வரையில் எவ்விதமான பரிமாற்றங்களையும் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டது.
பேஸ்புக், கூகுள்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யா-வை விட்டு வெளியேறுவது தவிர வேறு வழியே இல்லாமல் இருந்த காரணத்தால் பேஸ்புக், கூகுள் உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் தனது கட்டமைப்பு, வர்த்தகம் ஆகிய அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் உருவானது.
காத்திருப்பு பலன் கொடுத்தது
ஆனால் பல நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை விற்பனை செய்ய வாய்ப்புகளைத் தேடியும், ஆலோசனை செய்தும் வந்தது. இதில் கடந்த மாதம் எக்சான் மொபைல் தோல்வி அடைந்த நிலையில் தற்போது மெர்சிடீஸ் பென்ஸ் மற்றும் ஃபோர்டு குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஃபோர்டு
சுமார் 8 மாதங்கள் பேச்சுவார்த்தையில் இருந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு புதன்கிழமை ரஷ்ய வர்த்தகத்தில் வைத்திருந்த 49 சதவீத பங்குகளைத் தனது கூட்டணி நிறுவனமான Sollers Ford நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.
5 வருட கால அவகாசம்
இந்த 49 சதவீத பங்கு மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பங்கு விற்பனை ஒப்பந்தத்தில் அடுத்த 5 வருடத்தில் வாய்ப்பு கிடைத்தால் இந்த 49 சதவீத பங்குகளைத் திரும்ப வாங்கிகொள்ளலாம் என குறிப்பிட்டு உள்ளது.
ரஷ்யா மீதான தடை
அதாவது உலக நாடுகள் ரஷ்யா மீதான தடையை நீக்கினால் ஃபோர்டு நிறுவனம் இந்த 49 சதவீத பங்குகளை வாங்கத் தனது கூட்டணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மெர்சிடீஸ் பென்ஸ்
ஃபோர்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் ரஷ்ய வர்த்தக சந்தையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணியில் இயங்கி வரும் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்றுமதி, உற்பத்தி
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கி மேற்கத்திய நாடுகள் தடை விதித்த காலத்திலேயே ரஷ்யாவுக்கான கார் மற்றும் வேன் ஏற்றுமதிகளை நிறுத்தியுள்ளது. மேலும் ரஷ்யாவில் இயங்கி வரும் உற்பத்தி ஆலையும் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
ரஷ்யாவில் இயங்கி வந்த பல்வேறு வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெறும் கையுடன் வெளியேறி வந்த நிலையில் இன்று ஃபோர்டு மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் குறிப்பிட்ட தொகையுடன் வெளியேறியுள்ளது. இதற்கு முன்பு ரஷ்யாவில் இருந்து ஜப்பான் நாட்டின் நிசான், டோயோட்டா ஆகியவை வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications