ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் 3,000 சம்பளதாரர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது வாகனத் தொழிலை மின்சார துறைக்கு மாற்ற திட்டமிடும் போர்டு நிறுவனம், பல மறு சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
ஏன் பணி நீக்கம்
மின்சார வாகன துறைக்கு நிறுவனம் மாறுவதால், அதன் பணியாளர்கள் அதற்கான திறனைக் கொண்டிருக்கவில்லை என்று பல மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தான் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெசசன்
இது சர்வதேச அளவில் ரெசசன் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளன. ஆக பணி நீக்கத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
எந்த நாட்டில் ?
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் கனடா, இந்தியா, அமெரிக்காவினை சேர்ந்த ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையில் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்த நாட்டில் எவ்வளவு ஊழியர்கள் என்பது குறித்தான விவரங்கள் வெளியாகவில்லை.
பணி நீக்கம்
இந்த பணி நீக்கத்தில் 2000 சம்பளதாரர்களும், 1000 ஏஜென்சி வேலைகளும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர் கால நலன் கருதி இந்த நடவடிக்கைகள் அவசியமான ஒன்று. இதற்கு தெளிவு கவனம், வேகம் என்பது தேவை. நாங்கள் சமீபத்திய மாதங்களாக போட்டியாளர்களுக்கு ஏற்றவாறு எங்களது கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றோம்.
இந்தியாவில் இருந்து வெளியேற்றம்
சமீபத்திய மாதங்களுக்கு முன்பு 8000 பேருக்கு மேலாக பணி நீக்கம் செய்ய விரும்புவதாக கூறியது குறிப்பிடத்தக்கது. எனினும் அதிலிருந்து பின் வாங்கியது. இதன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்தும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் இதன் பெரும்பாலான பணி நீக்கம் இருக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications