போர்டு மோட்டார் நிறுவனம் ஐரோப்பா முழுவதும் 3,200 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. சில திட்டங்களை அமெரிக்காவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என ஜெர்மனியின் ஐஜி மெட்டல் தொழில்சங்கம் கூறியுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தேவையானது அதிகரித்து வரும் நிலையில், செலவுகளும் அதிகரித்து வருகின்றது.
இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களில் நிலவி வரும் மந்த நிலையானது, செலவினங்களை குறைக்க வழிவகுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
கடும் போட்டி
டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு மின்சார வாகன நிறுவனங்களும் விலைபோரை தூண்டியுள்ளது. இது மேற்கொண்டு நிறுவனத்திற்கு அழுத்தத்தினை தூண்டியுள்ளது. இதற்கிடையில் தான் நிறுவனம் செலவினங்களை சமாளிக்க இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கெல்லாம் பாதிப்பு
நிறுவனம் இந்த பணி நீக்க திட்டத்தில் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் பிரிவில் 2500 பேரையும், 700 நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களையும், ஆக மொத்தம் 3,200 பேரை பணி நீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இந்த பணி நீக்கத்தில் ஜெர்மன் பகுதிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.
இந்தியாவில் இருந்தும் வெளியேற்றம்
எனினும் போர்டு நிறுவனம் இது குறித்தான அதிகாரப்பூர்வ கருத்துகளை வெளியிடவில்லை. தொடர்ந்து சர்வதேச அளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை என்பது அதிகரித்து வரும் நிலையில், போர்டு நிறுவனம் படிப்படியாக தனது மின்சார வாகன உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இதனை திட்டமிட்டு, செலவு குறைப்பு மத்தியில் தான் இந்தியாவில் இருந்தும் கூட வெளியேறியது.
மறுசீரமைப்பு திட்டம்
இதற்கிடையில் தற்போது மின்சார வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள நிறுவனம், தேவையில்லாத அதிகப்படியான ஊழியர்களை பணி நீக்கம் செய்து விட்டு, தேவையானவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டிருக்கலாம். இதற்கிடையில் தான் இந்த மறுசீரமைப்பு திட்டத்தினையும் போர்டு நிறுவனம் கையில் எடுத்திருக்கலாம்.
முதலீட்டு திட்டம்
போர்டு நிறுவனம் கடந்த ஆண்டே தனது மின்சார வாகன உற்பத்திக்காக 2 பில்லியன் டாலர் முதலீட்டினை அறிவித்தது. இதன் முலம் மின்சார வாகன சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் போர்டு திட்டமிட்டுள்ளது. தற்போது போர்டு பியஸ்டா நல்ல செயல்பாட்டில் உள்ளது.
எதிர்கால திட்டம்
போர்டு நிறுவனத்தில் அதன் ஐரோப்பிய பகுதிகளில் சுமார் 45,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியில் 7 மின்சார வாகனங்களையும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு பேட்டரி அசெம்பிளி செய்யும் ஆலையும், இது தவிர மற்ற உதிரி பாகங்களுக்கான் ஆலையையும் கூட்டணியாக துருக்கியில் திட்டமிட்டுள்ளது.
முன்பே கணித்த நிறுவனம்
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்து 1.2 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இது இன்னும் அடுத்த தலைமுறை வாகனங்களுக்கு திட்டமிட்டவில்லை என்பது மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் வேலை குறைப்பு என்பது இருக்கலாம் என கடந்த ஆண்டே நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. ஏனெனில் மின்சார வாகனங்களுக்கான அசெம்பிளிங்கிற்கு குறைவான நேரமே தேவைப்படும். ஆக பணி நீக்கம் இருக்கலாம் என்று கணித்து இருந்தது நினைவுகூறத்தக்கது.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications