ஃபோர்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் ஜாக்பாட்..!!

சென்னை: அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கார் நிறுவனமான ஃபோர்டு, இந்தியச் சந்தைக்கு மீண்டும் நுழைய முடிவு செய்துள்ளது. இதற்கு முதலும் முக்கியமான காரணம் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம் தான். இந்த அமெரிக்கப் பணத்தில் கிட்டத்தட்ட 9000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை பெற்று இருந்தாலும், பலராலும் பாராட்டப்படுவது Ford உடனான பேச்சுவார்த்தை தான்.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போர்டு தமிழ்நாடு அரசிடம் சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் திட்ட அறிக்கையை (LoI) சமர்ப்பித்துள்ளது. சென்னையில் இருக்கும் அபரிவிதமான திறன் வாய்ந்த ஊழியர்களைப் பயன்படுத்தி சென்னை தொழிற்சாலையை முதன்மையாக ஏற்றுமதிக்காக மறுசீரமைப்பு செய்ய ஃபோர்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஃபோர்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் ஜாக்பாட்..!!

இந்த தொழிற்சாலையில் எந்த கார் தயாரிக்கப்படுகிறது, எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது இனி வரும் நாட்களில் முடிவு செய்யப்படுவதாக போர்டு-ன் சர்வதேச சந்தை குழுவின் தலைவர் கே ஹார்ட் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருக்கும் போர்ட்-ன் இதன் டெக் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவான Ford Business Solutions நிறுவனத்தில் இப்போது 12000 பேரை பணியில் அமர்த்தியிருக்கும் வேளையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 2,500 முதல் 3,000 பேரை வேலைக்கு அமர்த்தும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, இந்தியாவில் கார் உற்பத்தித் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. ஃபோர்டு, 2021 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போதைய இந்த முயற்சி, இந்தியாவில் இருக்கும் தனது சென்னை தொழிற்சாலையை வைத்து வெளிநாட்டுச் சந்தைகள் கவரத் திட்டமிட்டு இருப்பது இந்தியச் சந்தை மீது, தமிழ்நாட்டின் திறன் வாய்ந்த ஊழியர்கள் படையின் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஃபோர்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் ஜாக்பாட்..!!

ஃபோர்டு இந்தியாவுக்கு மீண்டும் வருவது, உள்ளூர் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புக்கு பெரும் ஊக்கமாக அமையும். மேலும், இந்தியாவில் இருந்து உலகளாவிய சந்தைகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய வாய்ப்புகள் தற்போது உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 2 புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது உற்பத்தி துவங்குவது மிகப்பெரிய விஷயமாகும்.

தமிழ்நாடு அரசு, ஃபோர்டு தனது தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தில் தூங்கிக்கொண்டு இருந்த ஃபோர்டு நிறுவனத்தைத் தட்டியெழுப்பியுள்ளது.

ஃபோர்டு தனது தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான குறிப்பிட்ட காலகட்டம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இருப்பினும், நிறுவனம் விரைவாக செயல்பட்டு, இந்தியாவில் தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+