அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு, சென்னையில் முடங்கிக் கிடக்கும் மறைமலைநகர் உற்பத்தி ஆலையை மறுசீரமைக்க திட்டத்தில் இறுதி முடிவை எடுக்க உள்ளது. இந்த தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு ஃபோர்டு நிர்வாகத்துடன் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்ட நிலையில் தற்போது முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.
முதலாவதாக ஃபோர்டு தனது சென்னை தொழிற்சாலையில் வாகன உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக, இந்த ஆலையை எஞ்சின் மற்றும் வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி மையமாக மாற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சென்னை தொழிற்சாலையில் இன்ஜின் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மொத்தமாக இன்ஜின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஹப் ஆக மாற்ற வேண்டும் என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போர்டு நிறுவனம் 2021-ல் இந்தியாவில் வாகன உற்பத்தியை நிறுத்தி, 2022-ல் முழுமையாக வெளியேறிய பின்னர், ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலை பல மாத பேச்சுவார்த்தைக்குப் பின்பு டாடா மோட்டார்ஸ்-க்கு விற்கப்பட்டது. தற்போது சென்னை தொழிற்சாலை மட்டும் ஃபோர்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, இதை வைத்தே இந்தியாவில் மீண்டும் நுழைய ஃபோர்டு திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் திட்டத்தை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது.
எஞ்சின் உற்பத்தியில் கவனம் செலுத்தும் இந்த முடிவானது, ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி கட்டமைப்பை மறுசீரமைப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகத் தெரிகிறது. இதன் மூலம் சென்னை ஆலை அதன் சர்வதேச விநியோகச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆலையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு வரும் இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய முதல்வர் முக.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து சென்னை தொழிற்சாலை மீண்டும் இயக்கப்படுவதற்கான உத்தரவாதத்தைப் பெற்றார்.
2022-ன் நடுப்பகுதியில் இருந்து செயல்படாமல் இருக்கும் மறைமலை நகர் ஆலை, புதிய உற்பத்தி வரிசையை அமைப்பதற்கு ஏற்றவாறு குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும். சென்னை தொழிற்சாலையில் கார் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிய அளவில் தான் இன்ஜின் தயாரிக்கப்பட்டது. இப்படியிருக்கும் வேளையில் தொழிற்சாலையில் அதிகளவிலான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
சர்வதேச வர்த்தகக் கொள்கைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, சென்னை தொழிற்சாலை வைத்து முன்பு தீட்டப்பட்ட பல திட்டங்கள் தற்போது குப்பையில் போனது, இதனால் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஃபோர்ட் நிர்வாகம் முக்கியமான முடிவை எடுத்து வருகிறது.
ஃபோர்ட் தரப்பில் இதுவரையில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் இந்தியாவில் 3 புதிய கார்களை தயாரிக்கும் பொருட்டு சில முக்கியமான மாடல்களுக்கு ஒப்புதல் பெற்றது. இந்த ஒப்புதல் மூலம் எந்த கார் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்களும் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications