அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்ட் சென்னை மறைமலைநகரில் தன்னுடைய வாகன உற்பத்தி ஆலையை செயல்படுத்தி வந்தது. 2022ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை செயல்பாட்டில் இல்லாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ட் நிறுவனம் மறைமலைநகர் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்காலிகமாக அந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது . அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியை தலைமை இடமாகக் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனம்தான் ஃபோர்ட். இந்த நிறுவனம் சென்னை அருகே மறைமலைநகரில் தன்னுடைய உற்பத்தி ஆலையை செயல்படுத்தி வந்தது. சென்னையில் வாகன உற்பத்தி துறைக்கு பெரிய ஊக்கம் தருவதாக அமைந்தது இந்த ஆலை.

கடந்த 2021ஆம் ஆண்டில் இந்த ஆலையில் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன. 2022ஆம் ஆண்டு முதல் ஆலை செயல்பாட்டிலேயே இல்லை. இந்த சூழலில் தான் மீண்டும் இங்கே உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகளை தொடங்கி இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் ஃபோர்டின் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.
ஃபோர்டு நிறுவனம் மறைமலை நகர் ஆலையில் என்ஜின்கள் உற்பத்தியில் ஈடுபட முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. மீண்டும் ஃபோர்டு ஆலை திறப்பது மாநில பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அரசும் பல ஏற்பாடுகளை செய்தது. ஆனால் ஃபோர்ட் நிறுவனம் தன் முடிவில் பின்வாங்கும் நிலைக்கு சென்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பதே ஃபோர்டின் இந்த முடிவுக்கு காரணமாகும். ஆலையை மீண்டும் செயல்படுத்துவதா இல்லை மொத்தமாகவே முடிவையே கைவிட்டு விடுவதாக கூடிய விரைவில் நிறுவன அதிகாரிகள் கூட்டம் நடத்தி முடிவு செய்ய இருக்கின்றனர். அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக மோதல் நீடிப்பதால் ஃபோர்ட் நிறுவனம் தங்களுடைய கவனம் முழுவதையும் ஐரோப்பிய சந்தையை நோக்கி திருப்பி விட்டிருக்கிறது.
ஐரோப்பிய பிராந்தியத்தில் புதிதாக 4.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கும் ஃபோர்ட் நிறுவனம் சென்னை ஆலய திறக்கும் முடிவை தற்காலிகமாக கைவிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எக்கனாமிக் டைம்ஸுக்கு பேட்டி அளித்திருக்கும் ஃபோர்டு செய்தி தொடர்பாளர்கள் சென்னையில் மறைமலை நகரில் இருக்கும் தங்களுடைய உற்பத்தி ஆலை தொடர்பான நிலைப்பாட்டில் 2024ஆம் ஆண்டு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை, விரைவில் அங்கே என்ன உற்பத்தியை திட்டமிட்டு இருக்கிறோம் என அறிவிப்பதாக கூறியுள்ளார்.
தற்போதைக்கு இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்பட்சத்தில் ஃபோர்டு நிறுவனம் தன்னுடைய ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications