அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான Ford சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் தனது புதிய மாடல் Endeavour காருக்கான பேடென்ட் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் சென்னை தொழிற்சாலையைப் பயன்படுத்தித் தனது புதிய எடிஷன் Endeavour காரை இந்திய சந்தைக்குக் கொண்டு வர களத்தில் இறங்குவதாகக் கூறப்பட்டது.
இந்தியாவை விட்டே வெளியேறத் திட்டமிட்ட Ford தொழிற்சாலை குஜராத் தொழிற்சாலையை மட்டும் விற்பனை செய்துவிட்டு, சென்னை தொழிற்சாலையை விற்க மணம் இல்லாமல் அப்படியே வைத்திருந்தது. இதற்கிடையில் JSW நிறுவனம் தனது MG எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க இத்தொழிற்சாலையை வாங்க முயற்சி செய்தி தோல்வி அடைத்து.

FORD நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி, வர்த்தகம் ஆகியவையற்ற நிறுத்திவிட்டு, ஆட்டோமொபைல் துறை செயல்பாட்டைக் கூர்ந்துக் கவனிக்கத் துவங்கியது. இதனாலேயே சென்னை தொழிற்சாலையை ஏற்றுமதிக்காகப் பயன்படுத்த ஃபோர்டு திட்டமிட்டு உள்ளதாக ஆரம்பக்கட்டத்தில் தெரிவித்தது.
ஆனால் இந்தியாவில் உருவாக்கியிருக்கும் எஸ்யூவி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் டிரெண்ட் மூலம் தற்போது தனது முடிவை மாறியுள்ளதோடு, சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை-க்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.
கடந்த மாதம் Full Size SUV காரான Endeavour காருக்கான பேடென்ட்- ஐ இந்தியாவில் ஃபோர்டு பதிவு செய்த நிலையில், தற்போது தனது உயர்தர எலக்ட்ரிக் காரான முஸ்டாங் மாக்-ஈ காருக்கான பெயரை இந்தியாவில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் Ford நிறுவனத்தின் இந்தியாவின் ரீ-என்ட்ரி உறுதியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி பணிகளை நிறுத்துவதாக அறிவித்த போது, தனது Mustang Mach-E காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக இந்தக் கார் இறக்குமதி செய்யப்பட்டுத் தான் விற்பனைக்கு வரும்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் வருடத்திற்கு 2500 கார்களை எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் இந்தியாவில் விற்பனை செய்ய முடியும். இந்தக் கட்டமைப்பில் தான் Endeavour கார் விற்க திட்டமிடப்பட்டது, இதே கட்டமைப்பில் தான் தற்போது Mustang Mach-E காரும் கொண்டு வரப்பட உள்ளது.
Mustang Mach-E கார் ஃபோர்டு நிறுவனத்தின் EV கனவின் பரிசு, இந்தக் கார் அமெரிக்காவில் பெரிய அளவிலான விற்பனை சாதனையை எட்டவில்லை என்றாலும் டெஸ்லாவுக்குக் கடுமையாகப் போட்டிக்கொடுக்கும் கார்களில் இதுவும் ஓன்று. சுமார் 600 கிமீ மைலேஜ் கொண்ட கார், சுமார் 1 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என ஆரம்பக்கட்ட கணிப்புகள் கூறப்படுகிறது.
Mustang Mach-E கார் சாதாரண EV கார் பிரிவில் அல்லாமல் ஆடம்பர எலக்ட்ரிக் கார் பிரிவில் வரும். Mercedes-Benz EQE, BMW iX, Audi Q8 e-tron ஆகியவற்றுடன் இந்தக் கார் போட்டிப்போடுகிறது.
Endeavour மற்றும் Mach-E கார் விற்பனையில் பெற்றால் சென்னை தொழிற்சாலையில் இவ்விரு கார்களும் தயாரிக்கப்படும். இல்லையெனில் 2500 கார்கள் உடன் ஃபோர்டு கடையை மூடிவிடும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications