இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. எனினும் தமிழகத்தில் இன்றைய நிலையிலும் தாக்கம் பெரியளவில் குறையவில்லை எனலாம்.
இதற்கிடையில் தமிழகத்தினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடி வருகின்றன.
ஏற்கனவே நிசான், ஹூண்டாய், ராய்ல் என்பீல்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியினை நிறுத்தியுள்ளன.
ஊழியர்கள் போராட்டம்
இந்த நிலையில் தற்போது ஃபோர்டு மோட்டார் நிறுவனமும் தற்காலிகமாக, தனது சென்னையை ஆலையில் உற்பத்தியினை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா பரவல் காரணமாக ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதையடுத்து, நிறுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்போதிலிருந்து நிறுத்தம்?
இந்த ஆலையில் சனிக்கிழமையிலிருந்து உற்பத்தியினை நிறுத்தலாம் என்று ஃபோர்டு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் ஃபோர்டு தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி
ஏற்கனவே தொழிலாளர்களின் கோரிக்கையின் படி ஆலை மே 14 முதல் மே 22 வரையில் ஆலை மூடப்பட்டதாகவும் கூறியுள்ளது. எனினும் தற்போது வரையிலும் நோயின் தாக்கம் இருந்து வரும் நிலையில், இது ஊழியர்களிடையே ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உற்பத்தியினை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
செலவுகளை ஏற்க வேண்டும்
சென்னை ஃபோர்டு ஊழியர்கள் சங்கம் 230 ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின், அனைத்து மருத்துவ செலவுகளையும் நிறுவனம் செலுத்த வேண்டும் என்றும் தொழிற் சங்கம் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு
இதனால் மாநில அரசு கட்டுப்பாடுகளை நீக்கும் வரையில் ஆலையை மூடுமாறும் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வைரஸினால் இழந்த ஊழியர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தொழிற்சங்கம் நிறுவனத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications