அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தனது மறைமலைநகர் தொழிற்சாலையில் பல வருடங்களுக்குப் பின்பு தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சியால் மிண்டும் உற்பத்தி பணிகளை துவங்க உள்ளது.
இதில் முதல் கட்டமாக அமெரிக்காவின் ஃபோர்டு நிர்வாகம் சென்னை தொழிற்சாலையில் இருந்து இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய எலக்ட்ரிக் வாகனங்கள் (EV), ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் (ICE) உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் பணியைத் துவங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஃபோர்டு சிஇஓ ஜிம் ஃபார்லி தலைமையிலான உயர் மட்ட குழு தற்போது EV மற்றும் ஹைப்ரிட் பிரிவில் புதிய காம்பேக்ட் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படத் திட்டமிடப்பட்டு உள்ளன. ஃபோர்டு நிர்வாகம் இதில் சில மாடல்களை இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த கார்களுக்கான இன்ஜின் பாகங்கள் மற்றும் பிற உதிரி பாகங்கள் சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
உலகளவில், குறிப்பாக சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற முக்கிய சந்தைகளில் EV கார்களுக்கான டிமாண்ட் தற்போது அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருப்பதால், தனது தயாரிப்புப் பணியை பன்முகப்படுத்தும் முடிவை ஃபோர்டு எடுத்துள்ளது.
இதன் காரணமாக ஹைப்ரிட் மற்றும் ICE வாகனங்களை தனது புதிய வர்த்தக திட்டத்தில் முக்கிய பகுதியாக இடம்பிடித்துள்ளது. சில காலாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை தாண்டி பிற நாடுகளில் இருக்கும் தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே தயாரிக்கும் திட்டத்தில் இருந்து தற்போது முழுமையாக மாறியுள்ளது. EV சந்தையில் இருக்கும் அபாயங்களை குறைத்து நிலையான பிஸ்னஸ் மாடலை உருவாக்கும் விதமாக 3 பிரிவுகளிலும் கனவம் செலுத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் EV சந்தை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில், ஃபோர்டின் ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தும் முடிவு இந்நிறுவனத்திற்கு சதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்கு பின்பு சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV), ஹைப்ரிட் மற்றும் இன்டர்னல் கம்பஷன் வாகனங்களில் எதை தயாரிக்கப்படுகிறது என்பது முடிவு செய்யப்பட உள்ளது.
போர்டின் இந்திய சந்தையில் மீண்டும் நுழைவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். ஏற்றுமதி மற்றும் அதன் நெகிழ்வான உற்பத்தி உத்தியில் நிறுவனத்தின் கவனம், எதிர்காலத்தில் தானியங்கித் துறையில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அதை நிலைநிறுத்துகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications