மெட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் அதன் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.
மெட்டாவின் இந்த அறிவிப்பினால் பற்பல இந்திய ஊழியர்கள் உள்பட பல ஹெச் 1 பி விசா ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மெட்டாவின் இந்த அறிவிப்பின் காரணமாக ஹெச் 1பி விசா மூலம் பணிபுரியும் ஊழியர்கள் 60 நாட்களில், புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
புதிய வேலை தேடிக் கொள்ள அவகாசம்
இந்த 60 நாட்களில் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர். அப்படி இந்த 60 நாட்களில் புதிய வேலை தேடிக் கொள்ளாவிட்டால், அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால் ஊழியர்கள் மட்டும் அல்லாது அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கால அவகாசம் நீட்டிப்பு
ஆனால் இவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு 4 மாதம் அவகாசம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. கடைசி நேரத்தில் அவர்களுக்கு கால அவகாசம் அதிகரிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்தினர் பாதிப்பு
ஊழியர்கள் மத்தியிலும் இது குறித்து கோரிக்கை எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணி நீக்கத்தினால் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் மட்டும் அல்லாது, அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படலாம். ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போதும், அவரது குடும்பத்தினரும் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். குறிப்பாக ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி என பலவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
ஊழியர்களின் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் தான் ஊழியர்கள் கால அவகாசத்தினை நீட்டிக்க ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மெட்டா நிறுவனம் மட்டும் அல்ல, அந்த சமயத்தில் அமேசான் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் இந்த காலகட்டத்தில் மாற்று வேலையினை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
60 நாட்கள் அவகாசம்
அமெரிக்காவின் விசா அறிக்கையின் படி, ஹெச் 1 பி விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது. ஆண்டுக்கு 65,000 ஹெச் 1பி விசா ஊழியர்களை அனுமதிக்கிறது. அவர்கள் வேலையினை இழந்தால், 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஆக வேலையிழந்த ஊழியர்களுக்கு வெறும் 60 நாட்கள் மட்டுமே அவகாசம் கிடைகிறது.
டெக் ஊழியர்கள் அதிகம் பாதிப்பு
அமெரிக்காவின் பெரும் பாலும் இந்த விசாவின் மூலம் பயனடைவார்கள். குறிப்பாக அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் பெரிதும் இந்த விசாவினை நம்பியுள்ளன. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் இந்த ஹெச் 1பி விசாவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் தான் தற்போது இந்த பணி நீக்க நடவடிக்கையிலும் அதிகம் டெக் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பலன் தரும்
மெட்டா நிறுவனத்தில் மட்டும் அல்ல, ஹெச் 1பி விசா மூலம் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளனர் எனலாம். ஆக அவர்களுக்கும் இது போன்ற கால அவகாசம் வழங்கப்பட்டால் மாற்று வழியினை தேட அது பயனுள்ளதாக இருக்கலாம். இது இந்திய ஊழியர்களாக இருந்தாலும் சரி, வெளி நாட்டு ஊழியர்களாக இருந்தாலும் சரி.


Click it and Unblock the Notifications