இந்திய பங்கு சந்தையில் வெளிநாட்டவர்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே.
வெளி நாட்டவர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போது இந்திய பங்குச்சந்தை சரியும் என்பதும், மீண்டும் வெளிநாட்டவர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது இந்திய பங்கு சந்தை ஏற்றம் காணும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டவர்கள் மீண்டும் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டும் ரூ.14 ஆயிரம் கோடி வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டவர்களின் முதலீடு
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டும் வெளிநாட்டவர்கள் இந்திய பங்குச்சந்தையில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும் இதனால் இந்திய பங்குச் சந்தை படிப்படியாக ஏற்றம் கண்டு வருவதாகவும் வருங்காலத்தில் இன்னும் அதிக அளவில் வெளிநாட்டவர்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
5000 கோடி
கடந்த ஜூலை மாதம் வெளிநாட்டவர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்த தொகையின் மதிப்பு வெறும் ரூ.5000 கோடி என்ற நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டும் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியேற்றம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டவர்கள் வெளியேறி கொண்டே வந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தையின் ஆட்டம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் வரை வெளிநாட்டவர்கள் தங்களது முதலீட்டை ரூ.2.46 லட்சம் கோடி விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூபாய் மதிப்பு
இதுகுறித்து இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ், யெஸ் செக்யூரிட்டீஸ் முன்னணி ஆய்வாளர் ஹிதேஷ் ஜெயின் கூறியபோது, 'ஆகஸ்ட் மாதத்தில் எஃப்.பி.ஐ நிலை நேர்மறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரூபாயின் மோசமான மதிப்பு முடிந்துவிட்டது. அதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு வரம்பில் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. எனவே உறுதியான வருவாய் வளர்ச்சி காரணமாக வெளிநாட்டவர் முதலீடு வலுவாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
டாலர் குறியீடு
வெளிநாட்டவர்களின் முதலீடு குறித்த தரவுகளின்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் எஃப்.பி.ஐ.க்கள் இந்திய பங்குகளில் ரூ.14,175 கோடியை செலுத்தியுள்ளனர். FPI உத்தியில் ஏற்பட்ட மாற்றம் சமீபத்திய சந்தை ஏற்றத்திற்கு பலத்தை அளித்துள்ளது. கடந்த மாதம் 109க்கு மேல் இருந்த டாலர் குறியீடு இப்போது 106க்கு கீழே சரிந்ததற்கும் எஃப்பிஐ வரத்துக்கான முக்கிய காரணம். இந்த போக்கு தொடரலாம்" என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் விகே விஜயகுமார் கூறினார்.
பங்குச்சந்தை நிபுணர்கள்
எனவே இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில மாதங்களாக இருந்த சரிவு காலம் முடிவுக்கு வந்து விட்டது என்றும் இனி இந்திய பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்றும் அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவதால் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் காணலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications