டெல்லி: நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம் பெரும் மந்த நிலையை எட்ட தொடங்கிய நிலையில், அன்னிய போர்ட்போலியே முதலீடுகள் நடப்பு மாதத்தில் மூன்றே நாளில் 3,741 கோடி ரூபாயை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், புராபிட் புக்கிங் காரணமாக அன்னிய போர்ட்போலியே முதலீடுகள் 3,741 கோடி ரூபாய் வெளியேறி வருகின்றன.

இந்த ஜூலை மாதத்தில் மொத்த அன்னிய முதலீடுகள் 3,959 கோடி ரூபாய் பங்கு சந்தையில் வெளியேறியுள்ளன. எனினும் இதில் கடன் சந்தையில் 218 கோடி ரூபாய் முதலீடுகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் மூன்று தினங்களில் 3,741 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன.
ஜூன் மாதத்தில் உள்நாட்டு சந்தைகளில் எஃப்பிஐ-க்கள் 24,053 கோடி ரூபாய் உள்நாட்டு சந்தைகளில் முதலீடுகள் பெறப்பட்ட நிலையில், நடப்பு மாதத்தில் மூன்று மாதத்தில் 3,741 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன.
கடந்த சில வாரங்களே சந்தை நல்ல விதமாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக முதலீடுகளும் அதிகளவில் இருந்து வந்தன. இந்த நிலையில் புராபிட் புக்கிங் செய்து வரும் நிலையில், கணிசமான முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
அதோடு நிபுணர்கள் மத்தியில் அடுத்த நிதியாண்டில் சந்தை நல்ல ஏற்றம் காணலாம் என்று கூறப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குமே என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications