இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், அங்கு நெருக்கடியான நிலை இருந்து வருகின்றது. குறிப்பாக கடன் பிரச்சனை, நிதி நெருக்கடி, விலைவாசி ஏற்றம், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தத்தளித்து வருகின்றன.
இது எல்லா பிரச்சனைகளையும் தாண்டி , இவ்விரு நாடுகளும் சந்தித்து வரும் பிரச்சனையில் ஒன்று அன்னிய செலவாணி கையிருப்பு.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியினை கூட செய்ய முடியாமல் தத்தளித்து வருகின்றன. குறிப்பாக அன்னிய செலவாணி சரிவால், பல முக்கிய இறக்குமதி பொருட்களின் இறக்குமதியினை கூட தடை செய்துள்ளது இலங்கை. இது மிக கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக அன்னிய செலவாணி கையிருப்பானது குறைந்து வருகின்றது, இது 3வது வாரமாக 590.588 பில்லியன் டாலராக ஜூன் 17, 2022வுடன் முடிவடைந்த வாரத்தில் சரிவினைக் கண்டுள்ளது. இது பல அண்டை நாடுகளின் கரன்சிகளானது பெரும் சரிவினைக் கண்ட நிலையில் பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது.
அன்னிய செலவாணி
ரிசர்வ் வங்கியின் தரவின் படி, மொத்த அன்னிய செலவாணி கையியோப்பானது 5.870 பில்லியன் டாலர் குறைந்து, 590.588 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது ஜூன் 17வுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய வாரத்தில் 596.458 பில்லியன் டாலராக இருந்தது.
கரன்சி அசெட்
இதே ஜூன் 17, 2022வுடன் முடிவடைந்த காலகட்டத்தில் கரன்சி அசெட்கள், 526.882 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5.362 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது., இது கடந்த வாரத்தில் 532.244 பில்லியன் டாலராக இருந்தது.
தங்கம் இருப்பு
தங்கம் இருப்பாக 40.584 பில்லியன் டாலராக ஜூன் 17, 2022வுடன் முடிவடைந்த வாரத்தில் குறைந்துள்ளது. இது முந்தைஒய வாரத்துடன் ஒப்பிடும்போது 258 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. SDR விகிதம் 18.155 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த வாரத்தினை காட்டிலும் 233 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.
ரூபாய் சரிவு
இந்திய ரூபாயின் மதிப்பும் வெள்ளிக்கிழமையன்று அதன் வரலாறு காணாத குறைந்தபட்ச விலை 78.33 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இது இன்னும் இன்னும் வரவிருக்கும் கூட்டங்களில் கடுமையாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை
இதற்கிடையில் எல்கேபி செக்யூரிட்டீஸ், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து மேலாக இருந்து வருகின்றது. ரூபாயின் மதிப்பானது 77.75 - 78.50 ரூபாய் என்ற லெவலில் வர்த்தகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன பிரச்சனை?
இலங்கை, பாகிஸ்தானினை போல, இந்தியாவில் மோசமான நிலையினை எட்டவில்லை. எனினும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சர்வதேச அளவில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக சரிந்துள்ள அன்னிய செலவாணி இருப்பு சரிந்துள்ளது, இது பெரியளவிலான பிரச்சனை என இல்லாவிட்டாலும், இந்தியா முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகவும் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications