இதற்கு முந்தைய தலைமுறையிடம் அவர்களின் கனவு என்ன என கேட்டால் நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தின் வேலை என்று தான் கூறி இருப்பார்கள். பெரும்பாலான இந்திய நடுத்தர குடும்பத்தினரின் கனவே இது தான். நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை செட்டிலாகிவிடும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. மிடில் கிளாஸ் மக்களின் கனவாக இருந்த நல்ல சம்பளம் நல்ல வேலை என்பது மாற்றம் கண்டுவிட்டது.
Marcellus Investment Managers என்ற நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை முதலீட்டு அதிகாரியுமான சௌரப் முகர்ஜி தன்னுடைய பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி மாறி இருக்கிறது என்பது குறித்து விரிவாக தெரிவித்து இருக்கிறார் . Beyond the Paycheck: India's Entrepreneurial Rebirth என்ற பாட் காஸ்டில் அவர் பகிர்ந்திருக்கும் கருத்துக்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

நடுத்தர மக்களின் கனவு:
ஒரு காலத்தில் இந்தியாவின் நடுத்தர மக்கள் ஒரு நிலையான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு நல்ல வைட் காலர் வேலை கிடைத்தால் போதும் என எண்ணினார்கள். தற்போதும் அவர்கள் அந்த மனநிலையில் இருந்தால் அது அவர்களுக்கு தான் ஆபத்து என கூறியுள்ளார். நல்ல வேலை வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும் நம்முடைய வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்ற மனநிலையை மாற்றி கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என தெரிவித்துள்ளார்.
வேலைக்கு போறதெல்லாம் பழைய காலம்:
அதாவது வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற போக்கு மறைந்து விட்டது எனக் கூறியிருக்கிறார். இந்த தசாப்தத்தில் இருக்கும் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் மனநிலையை வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் படித்த உறுதியான கடினமாக உழைக்கும் மக்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு தான் சிறந்தது என்ற மனநிலை மாறிவிட்டது எனக் கூறியிருக்கிறார். படித்து முடித்துவிட்டு நல்ல வேலைக்கு சென்று ஊதியம் பெற வேண்டும் என்ற கனவு தற்போது மறைந்து விட்டது என தெரிவித்திருக்கிறார்.
ஏஐ இனி உங்கள் வேலையை செய்யும்:
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களே இதற்கு காரணம் எனக் கூறியிருக்கிறார். உதாரணமாக ஐடி, மீடியா , பைனான்ஸ் ஆகிய துறைகளில் எல்லாம் மனிதர்கள் செய்து வந்த பல்வேறு வேலைகளும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் உதவியோடு தானியங்கி முறையாக மாற்றப்பட்டு விட்டன எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வைட் காலர் வேலைகள் இருக்காது:
வைட் காலர் ஊழியர்களால் செய்யப்பட்டு வந்த பல்வேறு வேலைகளும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செய்து முடிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார், கூகுள் நிறுவனம் தங்களுடைய பெரும்பாலான கோடிங் வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமே செய்து முடிக்கிறது என தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் ஐடி, மீடியா மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில் அடுத்த சில ஆண்டுகளில் இதே மாற்றத்தை நாம் காண முடியும் என அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
வேலைக்கு பாதுகாப்பு இல்லை:
தொழில்நுட்பங்களின் வருகை நுழைவு நிலை பதவிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆபத்து வந்துவிட்டது என கூற முடியாது நிறுவன மேலாண்மையில் நடுத்தர அளவில் இருக்கும் ஊழியர்களும் இதில் பாதிக்கப்படுகின்றனர் என கூறுகிறார் . அதாவது ஒரு காலத்தில் ஒரு நிறுவனத்தில் மேனேஜர் என்ற பதவிக்கு சென்று விட்டால் நம்முடைய நம்முடைய வேலைக்கு பாதுகாப்பு உண்டு நீண்ட காலம் இந்த வேலையில் நாம் நீடித்திருக்க முடியும் என இருந்த நிலைமையெல்லாம் தற்போது மாறிவிட்டது எனக் கூறியிருக்கிறார்.
காலம் மாறி வருகிறது:
ஒரு காலத்தில் நம்முடைய பெற்றோர் ஒரே நிறுவனத்தில் 30 ஆண்டுகளாக வேலை செய்திருப்பார்கள் ஆனால் அந்த நடைமுறை இப்போது நொறுங்கி விட்டது நிறுவனமும் நீங்கள் நீண்ட காலம் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை தற்போது இருக்கும் ஊழியர்களும் ஒரே நிறுவனத்தில் நீண்ட காலம் வேலை செய்ய வேண்டும் என மனநிலையில் இருந்து மாறிவிட்டனர் என தெரிவித்திருக்கிறார்.
மனநிலையை மாற்ற வேண்டும்:
ஒரு நிறுவனத்தில் ஃபிரஷராக வேலைக்கு சேர்ந்து விட்டு படிப்படியாக அதில் முன்னேறி ஒரு உயர் பதவிக்கு வர வேண்டும் என இத்தனை காலமாக நம்முடைய இந்திய குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தந்து வந்திருக்கிறோம். ஆனால் தற்போது அப்படி ஒரு சூழலே வேலை வாய்ப்பு சந்தையில் இல்லை என்பது தான் உண்மை என விளக்கம் தந்துள்ளார்.
சுயதொழில் தான் எதிர்காலம்:
இந்தியாவில் தற்போது தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது அதாவது ஒருவரிடம் சென்று நாம் வேலை செய்வதற்கு பதிலாக நாம் முதலாளியாக மாறி நாலு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இளைஞர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறதை குறிப்பிடுகிறார். ஒரே மாதிரியான மனநிலையிலிருந்து இந்த தலைமுறையில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக அவர் கூறுவது இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு தான்.
இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்பு:
ஜந்தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் போன்ற பல்வேறு டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது என தெரிவித்திருக்கிறார். எனவே இனிவரும் காலங்களில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் மற்றும் வருமான ரீதியாக வளர வேண்டும் என்றால் தொழில் முனைவு தான் அதற்கான வழி என அடித்து கூறுகிறார்.
வேலைக்கு செல்வது கௌரவம் கிடையாது:
இதற்கு முந்தைய தலைமுறையினர் ஒரு நிறுவனத்தில் சென்று வேலை தேடினர் ஆனால் தற்போது இருக்கக்கூடிய தலைமுறையினர் சொந்தமாக ஒரு நிறுவனத்தையே உருவாக்கி வருகின்றனர் அதற்கான வாய்ப்புகளும் கைக்கூடி அமைந்துள்ளது என தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு வேலைக்கு சென்று சம்பாதிப்பது தான் கௌரவம், என்பதற்கெல்லாம் இனி காலம் கிடையாது என முகர்ஜி கூறியுள்ளார்.
வேலையை உருவாக்குங்கள்:
நம்முடைய வெற்றி நம்முடைய சம்பளத்தை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது அது மாற வேண்டும் இல்லை காலம் அதனை மாற்றி வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்கள் குழந்தைகளை வேலையாட்களாக உருவாக்குவதற்கு படிக்க வைக்க கூடாது வேலைகளை உருவாக்கும் நபர்களாக மாற்றும் மனநிலையை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் எதிர்காலத்தில் வைட் காலர் வேலைகள் இருக்காது என்பதுதான் உண்மை என தெரிவித்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்முடைய பொருளாதாரத்தை மாற்றி அமைத்து இருக்கிறது அதற்கேற்ப நாமும் தகவமைத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications