இந்தியாவில் வேலைவாய்ப்புத் துறை கடந்த சில மாதத்தில் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு அமைப்புகளின் தரவுகள் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட சரிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் தகவல்கள் படி இந்தியாவில் வகைப்படுத்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் அளவு கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து உயர்வுடன் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம்
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்கள் படி புதிய EPFO சந்தாதாரர் சேர்க்கை அளவு ஜூலை மாதம் 1.82 மில்லியனில் இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 7.1% சரிந்து 1.69 மில்லியனாக உள்ளது.
EPFO சந்தாதாரர்கள்
இந்த அளவீடு ஜூன் மாதத்தில் 1.83 மில்லியனாகவும், மே மாதத்தில் 1.68 மில்லியனாகவும், ஏப்ரலில் 1.53 மில்லியனாகவும் இருந்தது. இப்படித் தொடர்ந்து 4 மாதங்களாக EPFO சந்தாதாரர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் சரிந்துள்ளது நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையின் மந்தமான நிலையைக் காட்டுகிறது.
ESIC நிகரச் சந்தாதாரர்
இதேவேளையில் ESIC நிகரச் சந்தாதாரர் சேர்க்கையில் ஜூலை மாதத்தில் 1.58 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதம் 8% சரிவை 1.46 மில்லியன் மட்டுமே பதிவு செய்துள்ளது. இன்சூரன்ஸ் திட்டத்தில் ஜூன் மாதத்தில் 1.56 மில்லியன் புதிய பதிவுகளைப் பெற்ற நிலையில், மே மாதத்தில் 1.51 மில்லியன் மற்றும் ஏப்ரலில் 1.28 மில்லியனையும் பதிவு செய்துள்ளது.
NPS திட்ட சந்தாதாரர்
இதேபோல் NPS திட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 0.71% குறைந்து 65,543 புதிய சந்தாதாரர்களாக மட்டுமே பெற்றுள்ளது, இது ஜூலை மாதத்தில் 66,014 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூன் மாதத்தில் 58,425, மே மாதத்தில் 60,926 மற்றும் ஏப்ரல் மாதம் 64,569 ஆக இருந்தது.
வேலைவாய்ப்பின்மை அளவுகள்
இந்நிலையில் செப்டம்பர் மாதம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவுகளின் தரவுகள். இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவு ஆகஸ்ட் மதத்தில் 8.28 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 6.43 சதவீதமாக உள்ளது.
ராஜஸ்தான் - 23.80 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 23.20 சதவீதம்
ஹரியானா - 22.90 சதவீதம்
திரிபுரா - 17.00 சதவீதம்
ஜார்கண்ட் - 12.20 சதவீதம்
பீகார் - 11.40 சதவீதம்
கோவா - 10.90 சதவீதம்
டெல்லி - 9.60 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் - 9.20 சதவீதம்
தெலுங்கானா - 8.30 சதவீதம்
புதுச்சேரி - 7.30 சதவீதம்
பஞ்சாப் - 7.00 சதவீதம்
கேரளா - 6.40 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 4.80 சதவீதம்
தமிழ்நாடு - 4.10 சதவீதம்
மகாராஷ்டிரா - 4.00 சதவீதம்
உத்தரப்பிரதேசம் - 4.00 சதவீதம்
கர்நாடகா - 3.80 சதவீதம்
மேற்கு வங்காளம் - 3.30 சதவீதம்
ஒடிசா - 2.90 சதவீதம்
மேகாலயா - 2.30 சதவீதம்
குஜராத் - 1.60 சதவீதம்
மத்திய பிரதேசம் - 0.90 சதவீதம்
உத்தரகண்ட் - 0.50 சதவீதம்
அசாம் - 0.40 சதவீதம்
சத்தீஸ்கர் - 0.10 சதவீதம்
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications