ட்விட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்றும் குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது குறித்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் என்பதும், அந்நிறுவனத்தை வாங்கிய முதல் நாளே ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் உள்பட ஒரு சில முக்கிய நிர்வாகிகளை அவர் வீட்டுக்கு அனுப்பினார் என்பதும் தெரிந்ததே.
ட்விட்டரை வாங்குதல்
கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை எலான் மஸ்க் செய்தார் என்பதும் கடந்த மே மாதம் அவர் ட்விட்டரை வாங்குவதில் சில பின்னடைவு ஏற்பட்ட போதிலும் தற்போது அவர் ட்விட்டரை வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சி.இ.ஓ நீக்கம்
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் செய்த முதல் பணி அதன் சி.இ.ஓவை வேலை நீக்கம் செய்தது என்பதும், அதுமட்டுமின்றி மேலும் சில முக்கிய நிர்வாகிகளையும் நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நம்பிக்கை
இந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதாகவும் அந்த கணக்குகளை நீக்க எலான் மஸ்க் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ட்விட்டர் தளத்தை அவர் புத்துணர்ச்சியுடன் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை அனைத்து பயனர்களுக்கும் உள்ளது.
டொனால்ட் டிரம்ப்
இந்த நிலையில் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கியது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நமது நாட்டை உண்மையாகவே வெறுக்கும் பைத்தியக்காரர்களின் கையில் ட்விட்டர் இனி இல்லை என்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் டுவிட்டர் சமூக வலைதளம் இனிய மிகப்பெரிய இலக்கை அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறி உள்ளார்.
மீண்டும் ட்விட்டருக்கு வருவாரா?
ஆனால் அதே நேரத்தில் ட்விட்டர் தளத்தில் அவர் புதிய கணக்கை ஆரம்பிப்பாரா? அல்லது இழந்த கணக்கை மீட்பாரா? என்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. நான் டுவிட்டரை வாங்கினால் டிரம்ப் கணக்கு மீண்டும் மீட்கப்படும் என்று ஏற்கனவே எலான் மஸ்க் தெரிவித்திருந்தாலும், டிரம்ப் மீண்டும் ட்விட்டருக்கு திரும்ப ஒப்புக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications