தற்போது முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் "ஒர்க் ப்ரம் ஹோமை" ரத்து செய்து "வொர்க் இன் ஆபிஸை" நடைமுறைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறது. கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த "வொர்க் பிரம் ஹோம்" காரணமாக பல்வேறு சாப்ட்வேர் இன்ஜினியர்களும் வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்தனர். ஆனால் தற்போது அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யவில்லை என்றால் விடுமுறை நாளில் கழித்துக் கொள்ளப்படும் என்று வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு ஐடி நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பி வருகின்றனர்.
2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அமேசான் வெப் சர்வீசஸ்-இல் பணிபுரிந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பாமல் தவிர்ப்பதற்காக பயன்படுத்தும் சில யுக்திகளைத் தெரிவித்துள்ளார். கொலராடோவில் வசிக்கும் ஜான் மெக்பிரைட், சமீபத்தில் பல நிறுவனங்களும் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு விதிமுறைகளை விதித்ததற்காக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

"நான் அமேசான் வெப் சர்வீஸில் பணிபுரிந்த போது சில சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அலுவலகத்திற்கு வராமல் தவிர்க்க சில வழிகளை பின்பற்றினார்கள் என்று மேக் ப்ரைட் தனது அதிகாரப்பூர்வ X பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது.
அந்தப் பதிவில் அவர் "1. கிளாசிக்: மதிய உணவின் போது பேட்ஜிங் செய்தல், இலவச காபி அல்லது சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியேறுதல். உண்மையில் அலுவலகத்தில் பணிபுரியும் நேரத்தைக் கண்காணிக்கும் வரை சில வாரங்கள் வேலை செய்தது"
"2. எனக்குப் பிடித்தமானது: வீட்டு வைஃபை நெட்வொர்க்குகளை உங்கள் அலுவலகத்தின் நெட்வொர்க்கின் அதே பெயருக்கு மறுபெயரிடுதல். பிறகு, நீங்கள் அன்றைய தினம் உள்நுழையும்போது, நீங்கள் வேலை செய்யும் சாஃப்ட்வேரில் அலுவலகத்தில் இருப்பதாக குறிக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் உள்ளே பணி புரியும் நேரத்தை அவர்கள் கண்காணிக்கும் வரை சில வாரங்களுக்கு இது வேலை செய்தது.
3. மேலும் சிலர் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் இருந்தாலும் தங்கள் பேட்ஜை அலுவலகத்தில் விட்டு விட்டு மற்றவர்களுடன் தங்களுக்குள் பேட்ஜ் செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இது சற்று ஆபத்தானது. ஆனால் பல மாதங்களாக இதைச் செய்த ஒருவரை எனக்குத் தெரியும்" என்று தனது போஸ்டில் குறிப்பிட்டிருந்தார்.
மெக் பிரைட் இந்த போஸ்ட்டை பகிர்ந்ததிலிருந்து பலரும் தங்கள் ஹேக்குகளை பகிர தொடங்கினர். தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான கட்டாயத்தை முன் வைக்கும் போது, ஊழியர்கள் அதை தவிர்க்க பல்வேறு தந்திரங்களை கையாள்கின்றனர் என்பது இதிலுருந்து தெள்ளத் தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications