டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நன்கு படித்தவர். மேலும் தனது சிறந்த கல்வி தகுதியின் பின்னணிக்காக அறியப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் கரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றார். நம் நாட்டில் மிகவும் சவாலான நுழைவுத்தேர்வுகளான ஐஐடி-ஜேஇஇ மற்றும் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்தியாவின் சில அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, வருவாய் சேவையில் (ஐஆர்எஸ்) வருமான வரி உதவி ஆணையராக சேர்ந்தார்.
புலிக்கு பிறந்தது பூனையாகது என்பது போல், அரவிந்த் கெஜ்ரிவாலின் குழந்தைகளான மகன் புல்கித் கெஜ்ரிவால் மற்றும் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலும் தனது தந்தையின் வழியை பின்பற்றி டெல்லி ஐஐடி பட்டதாரிகளாக உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் மகன் புல்கிட் கெஜ்ரிவால் அரசியல் வெளிச்சத்திலிருந்து விலகியே இருக்கிறார். புல்கித் சிறுவயது முதலே படிப்பில் படுகெட்டி. டெல்லி பப்ளிக் பள்ளியிலிருந்து சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை பெற்றார். பின்னர் இந்தியாவின் கடினமான மற்றும் போட்டி நிறைந்த தேர்வுகளில் ஒன்றான ஐஐடி-ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று, மதிப்புமிக்க டெல்லி ஐஐடியில் அட்மிஷன் பெற்றார். அதனை தொடர்ந்து அங்கு பயின்று பொறியியல் பட்டம் பெற்றார்.

நாடறிந்த ஒரு அரசியல்வாதியின் மகனாக இருந்தபோதிலும், பல அரசியல் வாரிசுகளை போல் அல்லாமல் அரசியலில் ஆர்வம் காட்டாமல், தனது கல்வி மற்றும் கேரியரில் புல்கித் கெஜ்ரிவால் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பம் மற்றும் புதுமை துறையில் தனது கவனத்தை புல்கிட் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. புல்கித் கெஜ்ரிவாலின் LinkedIn சுயவிவரத்தின்படி, 2021ல் மே முதல் ஜூலை வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கோடைகால பயிற்சியை முடித்தார்.
அடுத்து 2022ல் மும்பையில் உள்ள FINMECHANICS-ல் மே முதல் ஜூலை வரையிலான 3 மாதங்கள் பணியாற்றினார். புல்கிட் தனது வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறார். அரசியல் வேண்டாம் என்று தனது கல்வி மற்றும் கேரியர் நோக்கங்களில் தனது கவனத்தை புல்கித் செலுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications