ப சிதம்பரம் பளீர்.. எல்ஐசி பங்கு விற்பனை பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுங்கள்.. !

டெல்லி: கடந்த வாரம் சனிக்கிழமையன்று பல சவால்களுக்கும் மத்தியில் தனது இரண்டாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதிலும் பட்ஜெட் வரலாற்றிலேயே நீண்ட நேரம், அதாவது இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாசித்தார். அதிலும் கூடுதலாக இரண்டு பக்கங்கள் இருந்தும் அதை வாசிக்க முடியாமல் முன்னரே முடித்துக் கொண்டார்.

இப்படி ஒரு புறம் செய்திகள் வெளியாகி கொண்டிருக்க, மறுபுறம் இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், மோடி அரசாங்கம் தாக்கல் செய்த பட்ஜெட் 2020-ஐ பூஜ்ஜியம் என்றும் மதிப்பிட்டுள்ளார்.

இது பூஜ்ஜிய பட்ஜெட்

இது பூஜ்ஜிய பட்ஜெட்

கடந்த வியாழக்கிழமையன்று இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆறு காலாண்டு வளர்ச்சியை கைது செய்து, வளர்ச்சியை மீட்டெடுப்பதே தற்போதைய காலகட்டத்தின் கட்டாய தேவை. ஆனால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2020 அப்படி எதுவும் வழங்கவில்லை. ஆகவே அதை நான் பூஜ்ஜியமாக மதிப்பிட தயங்க மாட்டேன் என்றும் ப சிதம்பரம் கூறியுள்ளார்.

இது எப்படி சாத்தியம்

இது எப்படி சாத்தியம்

மேலும் மத்திய பட்ஜெட் 2020ல் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து தனது கருத்துகளை கூறிய ப சிதம்பரம், நடப்பு ஆண்டில் பெயரளவிலான ஜிடிபி 12% ஆக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் அதை 8.5% ஆக கணித்துள்ளோம். இதே அடுத்த ஆண்டில் நீங்கள் இந்த பெயரளவிலான ஜிடிபி வளர்ச்சியை 10% கணித்துள்ளீர்கள், ஆனால் உண்மையான ஜிடிபி விகிதம் 6- 6.5% என கணித்துள்ளீர்கள். இது எப்படி சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணவீக்கம் அதிகரிப்பு

பணவீக்கம் அதிகரிப்பு

வராலாற்று ரீதியாக பார்க்கும் போது பெயரளவிலான ஜிடிபிக்கும், உண்மையான ஜிடிபிக்கும் இடையிலான வித்தியாசம் 4 முதல் 5% வரை இருக்கும் என்றும் கூறியுள்ளார். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக மையம் கூறியது. ஆனால் சிபிஐ நுகர்வோர் விலை குறியீடு 7% தாண்டியுள்ளது. மொத்த விலைக் குறியீடும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக உணவு பணவீக்கம் 10% தாண்டி அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுக்கு செலவழிக்க தெரியவில்லை

அரசுக்கு செலவழிக்க தெரியவில்லை

இதெல்லாவற்றையும் விட மத்திய அரசு வருவாயை அதிகரிக்க அதிகம் செலவழிக்க வேண்டும். ஆனால் சான்றுகள் ஒதுக்கப்பட்ட நிதியை கூட முழுவதுமாக செலவழிக்க முடியவில்லை என்பதை காட்டுகிறது. சொல்லப்போனால் நிதி இல்லாததால் அரசாங்கத்திற்கு எப்படி செலவழிக்க வேண்டும் என்று தெரியவில்லை போல என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

பங்கு விற்பனை மூலம் நிதி திரட்டல்

பங்கு விற்பனை மூலம் நிதி திரட்டல்

மேலும் நடப்பு ஆண்டில் மத்திய அரசு பங்கு விற்பனை மூலம் 1,05,000 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் நாளில் அவர்கள் 18,000 கோடி ரூபாயை திரட்டியதாக கூறியது. மேலும் திருத்தப்பட்ட மதிப்பீடு 65,000 கோடி என்றும் கூறுகிறது. ஆக மீதமுள்ள 47,000 கோடி ரூபாயினை அடுத்த இரண்டு மாதத்தில் திரட்டுவார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஆண்டு அவர்கள் 2,10,000 கோடி ரூபாயாக இலக்கு வைத்துள்ளனர். இந்த எண்கள் நம்பதகாதவை என்றும் ப சிதம்பரம் கூறியுள்ளார்.

எல்ஐசி பங்கு விற்பனை ஏன்?

எல்ஐசி பங்கு விற்பனை ஏன்?

எல்ஐசி பங்கு விற்பனை ஏன்? மத்திய அரசு இதை மக்களுக்கு சொல்ல வேண்டும். எல்ஐசி உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு கொண்டு வருகிறது. எல்ஐசி ஒரு லாபகரமான நிறுவனம். நன்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் கடந்த ஆண்டு அதன் சந்தை பங்கினை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் எல்ஐசி பங்கினை விற்க முடிவெடுத்துள்ளது, அதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

இலக்கு மாற்றப்பட்டது ஏன்?

இலக்கு மாற்றப்பட்டது ஏன்?

5 டிரில்லியன் பொருளாதார இலக்கு மற்றும் 2022ம் ஆண்டளவில் விவசாயிகளின் வருமானத்தை இரடிப்பாக்குவது பற்றி கூறிய சிதம்பரம், $5 டிரில்லியன் பொருளாதார இலக்கினை ஏன் முதன்மை பொருளாதார ஆலோசகர் மாற்றினார். அரசாங்கம் அதை ஏன் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+