ஐஎம்எஃப் மீதும், கீதா கோபிநாத் ஆகியோர் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.. எச்சரிக்கும் ப சிதம்பரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை குறைவாக மாற்றியமைத்தமைக்கு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதன் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் மீதும் மத்திய அமைச்சர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலாக கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பக்கத்தில் சில பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

இப்பதிவில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கீதா கோபிநாத் முதன் முதலில் பணமதிப்பிழப்பை கண்டித்தார். ஆக சர்வதேச நாணய நிதியம் மற்றும் கீதா கோபிநாத் மீது மத்திய அமைச்சர்கள் நடத்த உள்ள தாக்குதலுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி மதிப்பீடு குறைப்பு

வளர்ச்சி மதிப்பீடு குறைப்பு

சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி குறித்தான தனது கணிப்பை, 2019ம் வருடத்திற்கான கணிப்பை 4.8% குறைத்துள்ளது. இதே 2020ல் 5.8% ஆக குறைத்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 2019ல் 6.1% ஆக இருந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1.3% குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியம் இல்லை

ஆச்சரியம் இல்லை

சர்வதேச நாணயத்தின் 2019- 20ல் இந்தியாவின் வளர்ச்சி 4.8% தான் என்ற இந்த திருத்தம் ஒரு சிறிய விளக்கம் தான், ஆனால் பொருளாதார வளர்ச்சி இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இது இன்னும் குறைவாக வளர்ந்தால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தயாராக இருக்க வேண்டும்

தயாராக இருக்க வேண்டும்

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் முதன் முதலாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்தார். இதனால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் கீதா கோபிநாத் மீது அரசாங்க அமைச்சர்கள் தாக்குதல் நடத்தலாம். ஆக நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன் என்றும் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

இந்திய பொருளாதாரம் குறித்து அவ்வப்போது தனது கருத்துகளை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளும் ப சிதம்பரம், முன்னதாக மத்திய அரசு பொருளாதாராத்தை தவறுதலாக கையாள்வதாக கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former FM P Chidambaram said Gita gopinath was one of the first to denounce demonetization

Former Finance minister P Chidambaram said Gita gopinath was one of the first to denounce demonetisation. And he tweet “i suppose we must prepare ourselves for an attack by government minister on the IMF and Dr Gita gopinath”.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X