சீன பொருட்கள் புறக்கணிப்பு.. சீனா பொருளாதாரத்தை பாதிக்காது.. ப சிதம்பரம் கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா, அண்டை நாடான இந்தியாவுடனான வர்த்தகம் என்பது, உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு பகுதியே.

 

ஆக நாம் சீன பொருட்களை தவிர்ப்பதால், அது சீன பொருளாதாரத்தினை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாம் முடிந்தவரை நம்பிக்கை அடைய வேண்டும். ஆனால் உலகின் பிற பகுதிகளுடன் துண்டிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாக்கு நஷ்டம் அல்ல

சீனாக்கு நஷ்டம் அல்ல

இந்தியா தொடர்ந்து உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். சீன பொருட்களை புறக்கணிக்க கூடாது. சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுடனான சீன வர்த்தகம் எந்தளவு? இது கொஞ்சம் தான். ஆக நாம் சீனாவினை புறக்கணித்தால் அது சீனாவுக்கு பெரிய நஷ்டம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

சீன பொருட்களை தவிர்ப்பது மோசமான விஷயம்

சீன பொருட்களை தவிர்ப்பது மோசமான விஷயம்

இது தான் இப்படி எனில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியான செய்தியொன்றில், சீன பொருட்களை தவிர்ப்பது என்பது மிக மோசமான விஷயம். வர்த்தக தடை செய்வதற்காக காரணங்களில் ஒன்று வர்த்தக பற்றாக்குறையை குறைப்பது. வர்த்தக பற்றாக்குறை என்பது மிக மோசமான விஷயங்களில் ஒன்று.

வர்த்தக பற்றாக்குறை உள்ளது
 

வர்த்தக பற்றாக்குறை உள்ளது

இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் முதல் 25 நாடுகளை பார்த்தால், அது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துடன் வர்த்தக உபரி உள்ளது. ஆனால் இந்த மூன்றில் ஒன்றை விட இந்திய பொருளாதாரம் வலுவானது என்று அர்த்தமல்ல. இதே மற்ற 22 நாடுகளுடன் வர்த்தக பற்றாக்குறை உள்ளது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிராட்ஸ், கத்தார், ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அடங்கும்.

வர்த்தக பற்றாக்குறை

வர்த்தக பற்றாக்குறை

ஆக சீன பொருட்களை தவிப்பது மோசமான விஷயம். சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை என்பது, சீனர்கள் இந்தியாவிடம் இருந்து வாங்குவதை விட, சீன தயாரிப்புகளை இந்தியர்கள் அதிகம் வாங்குகின்றனர். ஆக இது மோசமான விஷயம் அல்ல. ஏனெனில் இது நுகர்வோரி விருப்பமாகும், அது அவர்கள் விரும்பித் தான் வாங்குகிறார்கள்.

யோசிக்க வேண்டிய விஷயம் தான்

யோசிக்க வேண்டிய விஷயம் தான்

நிச்சயம் இதுவும் ஒரு வகையில் யோசிக்க வேண்டிய விஷயம் கூட, உலகின் இரண்டாவது பெரிய நாடான சீனா, உலகம் முழுக்க உள்ள நாடுகளில் வர்த்தகம் செய்யும் நிலையில், அது இந்தியாவினால் தவிர்க்கப்பட்டால் பெரிய பாதிப்பினைக் காணுமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former FM p Chidambaram said that boycotting Chinese products will not hurt china economy

Former finance minister P Chidambaram said that boycotting Chinese products will not hurt china’s economy.
Story first published: Sunday, June 21, 2020, 13:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X