இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் சீனாவைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்றெல்லாம் காது குளிர செய்திகள் முன்னர் வெளி வந்தன.
ஆனால் தற்போதோ வீழ்ச்சி, படு வீழ்ச்சி, சரிவு என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என மக்கள் மனதில் பதிய வைக்கின்றன.
இப்படி ஒரு நிலையில் தான் மத்திய புள்ளியியல் அமைச்சகம் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவிகிதம் தான் என்று தெரிவித்துள்ள்ளது. இதுவரை உலக வங்கியோ, சர்வதேச நாணய நிதியமோ, அல்லது பல பொருளாதார நிபுணர்கள் மட்டுமே கூறி வந்த நிலையில் தற்போது அரசே அதை ஒப்புக் கொண்டுள்ளது. இதை இன்னும் மோசமாக்கும் விதமாக முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். சரி அப்படி என்ன சொல்லி இருக்கிறார் வாருங்கள் பார்ப்போம்.
தனி மனித ஜிடிபி
இந்தியாவில் தனி மனித ஜிடிபி விகிதம் 4.3 சதவிகிதமாக மட்டுமே உயரும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பான்மையான இந்தியர்கள் தங்கள் வருமானத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் சிறிதளவு வளர்ச்சியையோ அல்லது வளர்ச்சியே இருக்காது என்றும் அதிர வைத்துள்ளார்.
முக்கிய துறைகள் வளர்ச்சி
நாட்டின் முக்கிய துறைகள் வளர்ச்சியானது 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும். சொல்லப்போனால் 3.2 சதவிகிதத்திற்கும் மேல் இல்லை. இந்த முக்கிய துறைகளில் விவசாயம், சுரங்கம், உற்பத்தி மற்றும் கட்டுமானம் ஆகியவை அடங்கும் என்றும் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறைகளின் வளர்ச்சியும் 3.2 சதவிகிதம் அல்லது அதற்கு கீழாகவே இருக்கும் என்றும் கவலையளிக்கும் விதமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவக்கப்படுகின்றன என்ற அரசாங்கத்தின் பெருமை ஒரு மிகப்பெரிய பொய். மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) என்பது தற்போதைய நிலையில் 2019 - 20 ம் ஆண்டில் 28.1 சதவிகிதமாக மட்டுமே இருக்கும். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகக் குறைவு. மேலும் உச்சத்திலிருந்து படு வீழ்ச்சி. இதனால் வணிகர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதையே வெறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 5 சதவிகிதமாக இருக்கும் என்று காட்டப்பட்டுள்ளது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அளவாகும். முதல் பாதியில் வளர்ச்சி 4.75 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது பாதியில் வளர்ச்சி 5.25 சதவிகிதமாக இருக்கும் என்று நம்புவது மிகக் கடினம் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தேசிய வருமானம்
கடந்த செவ்வாய்ழமையன்று வெளியிடப்பட்ட தேசிய வருமானம் 2019 - 20ன் மேம்பட்ட மதிப்பீடுகள், பாஜக அரசாங்கத்தால் பொருளாதாரத்தை எதிமறையாக நிர்வகித்த கதையை சொல்கின்றன என்றும் பதிவிட்டுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவெனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாகவும், இதே செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், தனி மனித ஜிடிபி விகிதம் இந்த அளவுக்கு குறைத்து காட்டியிருப்பது சற்று கவலையளிக்கும் விதமாகவே இருக்கிறது. அதிலும் ஒரு முன்னாள் நிதியமச்சர் இவ்வாறு கூறியிருப்பது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications