முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா நவநகரின் புதிய மகாராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விராட் கோலி, சச்சின் மற்றும் தோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களை விட அதிக சொத்துக்களை கொண்ட பெரும் பணக்காரராகியுள்ளார். இப்போது உலக கிரிக்கெட் அரங்கில் பெரிய பணக்காரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கடந்த அக்டோபர் 12, சனிக்கிழமை ஜாம்நகரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா ஜாம்நகரின் அரச சிம்மாசனத்தின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டார். முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சத்ருஷல்யசிங் ஜடேஜா தனது மருமகனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அஜய் ஜடேஜாவை தனது ராஜ்ஜியத்தின் வாரிசாக அறிவித்துள்ளார். இவர் இளம் வயதிலேயே விவகாரத்து பெற்றவர் என்பதால் இவருக்கு குழந்தைகள் இல்லை. எனவே அஜய் ஜடேஜா அரசு வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அஜய் ஜடேஜா இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதை அடுத்து தற்போது ஜாம்நகரின் புதிய அரசராக பதவியேற்க உள்ளார். இதன் மூலம் அஜய் ஜடேஜாவுக்கு அரண்மனை உள்ளிட்ட பல்வேறு அரச பரம்பரை சொத்துக்கள் கிடைத்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்துரசாசின் ஜடேஜா, தமது வாரிசாக அஜய் ஜடேஜா ஒப்புக்கொண்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மிகப்பெரிய பொறுப்பிலிருந்து நான் வெளியேறுகிறேன். தற்போது இதற்கு சரியான நபராக அஜய் ஜடேஜா செயல்படுவார் என்று அவர் பாராட்டி இருக்கிறார்.
இந்த அறிவிப்பின் மூலம், 1992 மற்றும் 2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 15 டெஸ்ட் மற்றும் 196 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அஜய் ஜடேஜா, பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஜாம்நகரின் சிம்மாசனத்தின் அடுத்த வாரிசாக அவர் இருப்பார் என்பதால், அவர் தனது நிகர மதிப்பான ரூ.1450 கோடியாக உள்ளது.
உலக கிரிக்கெட்டில் அதிக சொத்துக்கள் கொண்ட தற்போதைய கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி தான். அவரது சொத்து மதிப்பு சுமார் 1090 கோடி ரூபாய் ஆக உள்ளது. அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி சொத்து மதிப்பு ரூ.1040 கோடி, முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சொத்து மதிப்பு ரூ.1390 கோடியுடன் முதலிடத்தில் இருந்தார். இப்போது இவர்களை விட அதிக சொத்துக்களுடன் அஜய் ஜடேஜா இருப்பார் என்று கூறப்படுகிறது.
தி ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் கிடைக்கும் தரவுகளின்படி, ஜடேஜாவின் நிகர மதிப்பு சுமார் 1,450 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இவரது சொத்துமதிப்பு வெறும் 250 கோடி ரூபாயாக இருந்ததாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. தற்போது அவர் விராட் கோலி, சச்சின் மற்றும் தோனியை விட அதிக பணம் கொண்ட பணக்காராகியுள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 1,000 கோடி நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.
56 வயதான அஜய் ஜடேஜா இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், வர்ணனையாளாராக பங்கேற்று நிறைய பணம் சம்பாதித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலககோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் வழிகாட்டியாக இருந்துள்ளார். அப்போது அவர் அந்த வாரியத்திடமிருந்து எந்த சம்பளமும் வாங்கவில்லை.
இந்திய கிரிக்கெட் அணிக்காக அஜய் ஜடேஜா மொத்தம் 15 டெஸ்ட், 196 ஒரு நாள் போட்டிகளை விளையாடி உள்ளார். டெஸ்டில் 576 ரன்களும், ஒரு நாள் போட்டியில் 5359 ரன்களையும் எடுத்துளார். ஒட்டுமொத்தமாக 34 அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications