பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முகமது அசாருதீன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். இவர் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் இருந்த போது நடந்த பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரம் கோரி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கும் முகமது அசாருதீன் கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகித்தார்.

அவரது பதவி காலத்தில் ஐதராபாத்தில் உள்ள உப்பல் ராஜீவ் காந்தி மைதானத்திற்கு டீசல் ஜெனரேட்டர், கூடாரம் அமைத்தல் மற்றும் தீயணைப்பு சாதனங்களை வாங்கியதில் 20 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத் காவல் துறையினர் முகமது அசாருதீன் மீது நான்கு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்தனர் .ஆனால் முகமது அசாருதீன் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஐதராபாத் நீதிமன்றத்தில் முகமது அசாருதீன் ஏற்கனவே மனு தாக்கல் செய்து மூன்று வழக்குகளில் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார் . முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலுங்கானாவின் ஒன்பது இடங்களில் சோதனை நடத்தினர்.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் வகித்தவர்களின் இல்லங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. அப்போது சில டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆவணங்கள் , கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
மேலும் வேண்டுமென்றே பணிகளை தாமதப்படுத்தி இந்த பட்ஜெட்டை உயர்த்தி ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமலாக்க துறையின் குற்றச்சாட்டு ஆவணம் தெரிவிக்கிறது. சந்தை நிலவரத்தை விட இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு கூடுதலான தொகைக்கு டெண்டர்களை விடுத்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக 99 டெஸ்ட் மற்றும் 334 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 15593 ரன்கள் குவித்தவர் தான் அசாருதீன். மூன்று முறை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். 61 வயதான அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
தற்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்க பண மோசடி விவகாரத்தில் அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது, அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications