சீனாவை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளது.. எப்படி தெரியுமா..!

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் போது, குறிப்பாக கார்பன் உமிழ்வைக் குறைக்கும் போது சீனாவை விட இந்தியா ஒரு பெரிய பிரச்சனையை முன் வைக்கிறது என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் நியூயார்க்கின் முன்னாள் மேயரும், தொழில் அதிபருமான மைக்கேல் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ப்ளும்பெர்க்கின் நிறுவனம் உலக அளவில் செய்திகளையும், நிதி சம்பந்தமான செய்திகளையும் அளிக்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இப்படி ஒரு முன்னணி தொழிலதிபரும், அரசியல்வாதியுமான மைக்கேல், சீனா கால நிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் விஷயத்தில் சீனர்கள் குறைந்து விட்டனர். ஆனால் இந்தியா சீனாவை விட இன்னும் மிகப்பெரிய பிரச்சனையில் உள்ளது. ஆனால் இதை பற்றி யாரும் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

கட்டுப்படுத்த கோரிக்கை

கட்டுப்படுத்த கோரிக்கை

சீனாவில் அதிக முதலீடு செய்யப்படும் அவரின் வணிகத்தை பற்றி கேட்டபோது, உலகில் கார்பன் உமிழ்வை உற்பத்தி செய்யும் நம்பர் ஒன் நாடான, சீனாவை இந்த காலநிலை நெருக்கடியை சமாளிக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் பெய்ஜிங்கிடம் கட்டாயப்படுத்தியுள்ளதாகவும் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் பல கரியமில வாயுக்கள் காற்றிலும் நீரிலும் விடக்கூடாது என்பதற்காக சில விதிகள் இருந்தால், நீங்கள் சில வித்தியாசங்களை ஏற்படுத்துவீர்கள். அது கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

சீனா தான் காரணம்

சீனா தான் காரணம்

அமெரிக்காவின் முன்னாள் துணைத் தலைவர் ஜோ பிடன், சீனா உலகம் முழுவதும் மாசுபாட்டைப் பரப்புவதாக குற்றம் சாட்டியவர். சீனாவின் யோசனையையும் அவர்களின் பெல்ட் மற்றும் சாலை முன்மொழிவும் தான் உலகின் மிக மோசமான நிலக்கரியை மங்கோலியாவிலிருந்து எடுத்து உலகம் முழுவதும் பரப்புகின்றன என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் உலகப் பொருளாதாரமும் சீர் குலைகிறது என்றும் கூறியுள்ளார்.

இந்தியா போன்ற நாடுகள் பயன்

இந்தியா போன்ற நாடுகள் பயன்

பாரீஸ் கால நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக 2017 ஜூன் மாதம் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். கடுமையான அந்த ஒப்பந்தம் அமெரிக்காவை நியாமற்ற முறையில் தண்டித்தது. ஆனால் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மிக பயனளித்தது. இதன் மூலம் இந்தியா போன்ற நாடுகள் வளர்ந்த நாடுகளிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்று பயனடைய வாய்ப்பாக இது அமைந்தது என்றும் மைக்கேல் கூறியுள்ளார்.

முயற்சியை குறைத்தது

முயற்சியை குறைத்தது

மேலும் பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதற்கான நேரம் மற்றும் சுற்றுசூழலையும் எங்கள் நிறுவனங்களையும், நமது குடிமக்களையும், நம் நாட்டையும் பாதுக்காக்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தையும் பாதுகாக்க ஒரு புதிய ஒப்பந்தத்தை தொடர வேண்டிய நேரம் இது என டிரம்ப் கூறியது. புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளைக் குறைத்தது என்றும் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

வருவாயிலும் ஏற்றத்தாழ்வு

வருவாயிலும் ஏற்றத்தாழ்வு

ஆனால் உலகில் கரியமில வாயு வெளியேற்றும் முதல் 10 நாடுகளில், சரியான நடவடிக்கைகளால் தெளிவான முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஒரு பகுப்பாய்வு மூலம் அறிய முடிகிறது. மேலும் இந்தியாவின் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் இந்த முயற்சிகள் போதாது. இது விவசாய நெருக்கடிகளை அதிகமாக்குவதோடு, மேலும் அதன் வருமானத்திலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது என்று, அந்த அறிக்கையும் மைக்கேல் கூறியதைப் போல் கூறியது கவனிக்கதக்கது. .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+