முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார். மன்மோகன் சிங் மறைவு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் ரிமா தாதா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், 92 வயதில் மறைந்ததை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வயது முதிர்வு தொடர்பான சில மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்று வந்தார், இந்நிலையில் டிசம்பர் 26, 2024 அன்று வீட்டில் திடீரென மயக்கம் அடைந்து நினைவை இழந்தார். வீட்டிலேயே முதலுதவி, முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மாலை 8:06 மணிக்கு AIIMS, டெல்லி மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அனைத்து முயற்சிகளும் செய்தபோதும் அவரை மீட்டெடுக்க முடியவில்லை. மாலை 9:51 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

92 வயதான மன்மோகன் சிங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. மன்மோகன் சிங்-ன் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் 9.51 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.
மன்மோகன் சிங் அலுவலகத்தின்படி, முன்னாள் பிரதமர் "தீவிர மூச்சுத் திணறல்" பிரச்சனையை எதிர்கொண்டதாகவும், இதனால் அவர் AIIMS மருத்துவமனையில் ICU பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். AIIMS மருத்துவமனையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
மன்மோகன் சிங் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் ரொம்ப ஸ்பெஷல், இந்தியாவின் ஒரே சீக்கிய பிரதமர் இவர் தான். இந்தியாவின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்ட பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், பிரதமர் பதவியில் விலகிய பின்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் பதவியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதன் மூலம் 33 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றிவிட்டு தனது நேரடி அரசியல் பயணத்தை முடித்தார்.
கடைசியாக மன்மோகன் சிங், மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தார், பணமதிப்பிழப்பைத் திட்டமிட்ட கொள்ளை என்று கூறினார். பணமதிப்பிழப்பால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது, இதேபோல் வகைப்படுத்தா துறையின் வர்த்தகம் பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications