வருவாயை அதிகரிக்க மாநில அரசு வரி விதிக்கலாம்! முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சொல்லும் யோசனையை பாத்தீங்களா?

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் மாநில அரசுகளின் வருவாயை அதிகரிக்க ஒரு முக்கியமான யோசனையை வழங்கியுள்ளார். அதாவது அமெரிக்காவில் இருப்பது போலவே மாநில அரசும் குடிமக்களிடமிருந்து மாநில வருமான வரியை விதிக்கலாம் என்பதுதான் அந்த யோசனை.

இப்படி மாநில அரசுகளும் வரி விதித்தால் வரிச் சுமை அதிகமாகாதா? என்ற கேள்விக்கு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்சில் சொற்பொழிவு ஆற்றிய ரங்கராஜன் பதிலும் அளித்துள்ளார். "மாநில அரசுகள், மாநிலம் வருமான வரியைப் பெற விரிவான செயல்முறையை மேற்கொள்ள வேண்டியதில்லை.

 வருவாயை அதிகரிக்க மாநில அரசு வரி விதிக்கலாம்! முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சொல்லும் யோசனையை பாத்தீங்களா?

எப்போதும் போல வருமான வரியைத் தாக்கல் செய்யுங்கள். உங்கள் வருமானம் என்ன என்பதை தெரியப்படுத்துங்கள். அதில் ஒரு சதவீதம் மாநில வருமான வரியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மாநில அரசுகள் உங்கள் வருமான வரி அறிக்கையை பார்க்கவே மாட்டார்கள். இது மிகவும் எளிய செயல்முறை தான்", என்று அவர் கூறியுள்ளார்.

மாநில அரசுகளின் பட்ஜட்களை பார்த்தால் வரி வசூலின் முக்கிய ஆதாரமாக மதுபானம், புகையிலை மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் தான் உள்ளன. எனவே அரசு வருவாயை அதிகரிக்க விரும்பினால் வரி தளத்தை விரிவுபடுத்தியாக வேண்டும். மாநில அரசுகள் வருவாயை அதிகரிக்க வேறு வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வருவாயை அதிகரிக்க சில நேரடி வரி விதிப்பு செயல்முறையை கையில் எடுக்கலாம் என்றும் ரங்கராஜன் பரிந்துரைத்துள்ளார். அவற்றில் செலவின வரி, நிதி பரிவர்த்தனைகள் மீதான வரி ஆகியவை அடங்கும்.

Take a Poll

செலவின வரி என்பது நாம் செய்யும் செலவுகளுக்கு விதிக்கப்படும் வரி. நாம் ஏதேனும் பொருட்களை வாங்கினாலோ அல்லது சேவைகளை பெற்றாலோ அதற்கு விதிக்கப்படும் வரி தான் இது. உதாரணமாக ஆடம்பர பொருட்கள், உணவகங்களில் சாப்பிடுவது போன்றவற்றுக்கு இந்த வரியை விதிக்கலாம்.

நிதி பரிவர்த்தனைகளின் மீதான வரி என்பது முக்கியமாக வங்கிகள் பங்குச்சந்தைகள் போன்ற நிதி நிறுவனங்களில் நடக்கும் பரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் வரி. பணம் அனுப்புவது, பணம் பெறுவது போன்ற அனைத்து நிதி நடவடிக்கைகளுக்கும் இந்த வரி பொருந்தும்.

அதோடு ரங்கராஜன் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை பயன்படுத்துவது இன்னும் குறையவில்லை. மக்கள் சீக்கிரம் காற்று, நீர், சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இது அவ்வளவு வேகமாக நடக்கவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து தான் இன்னும் எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம்.

சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரித்தால் அது நமது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். 1991-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்தும் ஸ்ரீ ரங்கராஜன் நினைவு கூர்ந்தார். அப்போது சர்வதேச அளவில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. இதனால் எண்ணெய் இறக்குமதிக்கு.. அதற்கு முன்னர் செலவு செய்யப்பட்ட 3.8 பில்லியன் டாலர் 6 பில்லியன் டாலராக உயர்ந்தது. அப்போது ஏற்பட்ட கூடுதல் செலவுகளை சமாளிக்க நம் நாட்டில் போதுமான நிதி இல்லை. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டன என்றும் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+