கொரோனாவில் இருந்து விடுபட இந்தியா இரண்டாவது முறையாக லாக்டவுனை நீடித்துள்ளது. ஆனால் இந்த நிலையிலும் கூட கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடாக இல்லை.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மீண்டும் ஒரு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால், இந்திய பொருளாதாரம் பெரும் பேரழிவைத் சந்திக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
பொருளாதாரத்தினை மீட்டெடுக்க நடவடிக்கை
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் காணொலி மூலம் உரையாடிய போது, இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொருளாதார நிலை குறித்து பேசியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் அதனை புதுபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்தியா பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதில் மிக புத்திசாலிதனமாக இருக்க வேண்டும் என்றும் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை காப்பாற்ற இது தேவை
வைரஸினை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் லாக்டவுனை நீட்டிப்பது எளிது. ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது என்றும் ராஜன் கூறியுள்ளார். இந்தியாவின் மொத்த 200 லட்சம் கோடி ஜிடிபியில், மக்களை காப்பாற்ற 65,000 கோடி ரூபாய் தேவை. இந்த தொகை மிகக் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திறன் இல்லை
எனினும் இத்தகைய நெருக்கடியை எப்படி நாம் சாதகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து யோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு மக்களை முழுவதும் ஆதரிக்கும் திறன் நம்மிடம் இல்லை. நமக்கு திறன்கள் குறைவாக இருப்பதால், நாம் எதற்கு முன்னுரிமை அளிக்க போகிறோம். எவ்வாறு நாம் பொருளாதாரத்தினை பாதுக்காக்க போகிறோம் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவின் பலவீனம்
இந்தியாவின் பலவீனமே டெஸ்டிங் தான். இந்தியா அதன் சோதனை திறனை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். மேலும் அமெரிக்காவின் அளவுக்கு வலிமையாக இருந்தால், ஒரு நாளைக்கு 2 மில்லியன் சோதனைகளையாவது நடத்த வேண்டும். ஆனால் நாம் அதற்கு அருகில் இல்லை. ஒரு நாளைக்கு 25 -30 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு நாளைக்கு 5 லட்சம் சோதனைகளாவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
கிக் பொருளாதாரம் குறித்து கவலை
ராஜன் நாட்டின் கிக் பொருளாதாரம் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளார். ஆக ஒவ்வொரு துறையிலும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த தொற்று நோய் காலங்களில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவை என்றும் கூறினார். இந்த துறைகளில் உள்ளவர்கள் பெரும் இழப்பினை சந்தித்துள்ளனர். சிலர் வருமானத்தில் ஒரு பகுதியை இழந்துள்ளனர். மற்றும் பலர் வேலையினையே இழந்து விட்டனர் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications