மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த வாரம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மத்திய பட்ஜெட்டில் வரிகள் குறைக்கப்படுமா என்று பல்வேறு தரப்பினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகுராம் ராஜன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நுகர்வை அதிகரிக்க வரி குறைப்பு நடவடிக்கை கவர்ச்சிகரமானதாக தோன்றினாலும், அரசின் நிதி நிலைமை அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள இடமளிக்காது. ஏனென்றால் நாட்டின் நிதி நிலை அவ்வளவு வலுவாக இல்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையில் உள்ளன. அரசு கவனமாக பரிசீலிக்காமல் செலவினங்களை அதிகரிப்பது தாங்க முடியாத கடன் நிலைகளுக்கு வழிக்கும். இந்த கட்டத்தில், வரிகளை குறைப்பது பற்றி அதிகம் யோசிக்க கூடாது. ஒவ்வொரு மட்டத்திலும் நமது மனித மூலதனத்தின் தரத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது எதிர்காலத்தின் புதிய பொருளாதாரத்தில் நமக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

மனித மூலதன மேம்பாட்டிற்கான பயனுள்ள பொது செலவை மேற்கொண்டால் அது சிறந்த பலன்களை தரும். நீங்கள் வலுவான வருமான வளர்ச்சியை உருவாக்கவில்லை என்றால் எதுவும் சிக்கலாக இருக்கும். ஆனால் நமது வரிகளின் நிலைகளில், குறிப்பாக அது ஒரு பெரிய பிரச்சினை என்று நான் நினைக்கவில்லை. நாம் ஒவ்வொரு முறையும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் மிக முக்கியமான பிரச்சினை என்னவென்றால், நமக்கு வலுவான வேலை உருவாக்கம் தேவை. குறைந்த மற்றும் நடுத்தர வருமான வர்த்தகத்தின் சிறிது காலமாக நுகர்வு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளையில், உயர் நடுத்த வர்க்கத்தினரிடையே எச்சரிக்கையுடன் செலவழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
நமக்கு நியாயமான வேலைகள் உள்ளதா?, நம் குழந்தைகள் நல்ல வேலையில் இருக்கிறார்களா?, எதிர்காலத்தை செலவிட போதுமான நம்பிக்கையுடன் இருக்கிறோமா? பொருளாதாரத்தில் மந்தமான தேவை நிலவுவதை இந்த கவலைகளுக்கு காரணம். சமீபத்தில் ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட உள்கட்டமைப்பு முதலீடுகள் வளர்ச்சியை உந்தியுள்ளது. இருப்பினும், உள்கட்டமைப்பு மட்டுமே வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற ஆழமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியாது. கல்வி, சுகாதாரம் மற்றும் பல்கலைக் கழகங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது அதிக உற்பத்தி கொண்ட பணியாளர்களை உருவாக்கி நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
நான் 8 ஆண்டுகளுக்கு முன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது, தனியார் முதலீடு ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டேன். தனியார் முதலீடு வராதது பெரிய புதிராக இருந்தது. எதிர்கால தேவைகள் குறித்த சந்தேகங்கள் மற்றும் வணிக தலைவர்களிடையே நம்பிக்கையின்மை உள்ளிட்ட பல காரணிகளின் கவலையே இதற்கு காரணம். முதலீடு என்பது பெரும்பாலும் விலங்கு மனநிலையை பற்றியது. இது தனியார் துறை எதிர்காலத்தை பற்றி கொண்டிருக்கும் நம்பிக்கை உணர்வை பற்றியது. மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு ரிஸ்க் எடுக்கும் தன்மையை உள்ளடக்கியது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேவை பற்றிய தெளிவாக உணர்வு இல்லாமல், வணிகங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Story Written By: Subramanian


Click it and Unblock the Notifications