ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த உர்ஜித் படேலுக்கு முக்கிய பொறுப்பு தந்த மோடி அரசு!

டெல்லி: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக செயல்பட்ட உர்ஜித் படேலுக்கு மத்திய அரசு புதிய பொறுப்பினை வழங்கியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் என்பது உலகளவில் மிக முக்கியமான ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் அன்றாட பணிகளை கவனிக்கும் நிர்வாக வாரியத்தில் உறுப்பு நாடுகளின் 24 நிர்வாக இயக்குநர்கள் செயல்படுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம்: இந்தியா சார்பில் இந்த நிர்வாக இயக்குநர் பதவிக்கு உர்ஜித் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உர்ஜித் படேல் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக 3 ஆண்டு காலத்திற்கு பொறுப்பு வகிப்பார் . இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான உர்ஜித் படேலை சர்வதேச நாணயத்தின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு 3 ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த உர்ஜித் படேலுக்கு முக்கிய பொறுப்பு தந்த மோடி அரசு!

உர்ஜித் படேல்: பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த பணியில் இருப்பார் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் 24 ஆவது ஆளுநராக பதவி ஏற்றார் உர்ஜித் படேல். ஆனால் அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்திருந்தார். 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநராக குறுகிய காலம் பதவி வகித்த ஒரு நபர் என்ற பெயர் இவருக்கு கிடைத்தது .

ரிசர்வ் வங்கி ஆளுநர்: அந்த சமயத்தில் தான் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன . உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றுவதற்கு முன்பாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பணவியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை ,புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை உள்ளிட்ட துறைகளை இவர் கவனித்து வந்தார் .

ஏற்கனவே ஐஎம்எஃப் பணி: இவர் 30 ஆண்டுகளுக்கு முன்னரே ஐ எம் எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முதலில் வாஷிங்டனில் பணியாற்றி வந்த இவர் 1992 ஆம் ஆண்டு ஐஎம்எஃப்-இன் டெல்லிக்கான பிரதிநிதியாக மாறி பணியில் சேர்ந்தார். இந்த சூழலில் மீண்டும் அவருக்கு அதே அமைப்பில் செயல் இயக்குனராக பதவி கிடைத்திருக்கிறது.

ரிலையன்ஸில் வேலை: 1998 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பொருளாதார விவகார துறையின் கீழ் மத்திய நிதி அமைச்சகத்தின் ஆலோசகராக பணியாற்றி வந்தார் . ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிஎஃப்சி லிமிடெட், எம்சிஎக்ஸ் லிமிடெட் மற்றும் குஜராத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளை வகுத்திருக்கிறார்.உர்ஜித் படேல் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் படிப்பை முடித்து இருக்கிறார் யூனிவர்சிட்டி ஆப் லண்டனில் பிஎஸ்சி படிப்பை முடித்தவர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+