நிலையான முதலீடுகளை ஊக்குவிக்கும் பொறுப்பு அரசாங்கங்களிடமே இருக்க வேண்டும். மத்திய வங்கிகளிடம் அல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கிகள் அரசியல் ரீதியாக இயக்கப்படும் க்ரீன் முதலீடுகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும். ஏனெனில் நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதற்கான அம்சங்கள் ஏற்கனவே பரவலாக உள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக பணிபுரிந்த ரகுராம் ராஜன், முன்னதாக க்ரீன் முதலீடுகளின் நிதி நிலைத்தன்மை மற்றும் கிரிப்டோ கரன்சிகள் மற்றும் சைபர் செக்யூரிட்டிகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

இதற்கிடையில் தற்போது கிரிப்டோ கரன்சிகள் முறையாக பயன்பாட்டுக்கு வந்தால் அதன் மீது நம்பிக்கை வரும். அதாவது பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகளில் கிரிப்டோ கரன்சிகள் பயன்பாட்டுக்கு வந்தால் நம்பிக்கை அதிகரிக்கும் என ராஜன் கூறியுள்ளார்.
கிரிப்டோ கரன்சிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒழுங்குபடுத்தப்பட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்புக்கும், அவற்றின் அடிப்படைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவாகவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட கரன்சிகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய காலங்களில் கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு என்பது கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றது. கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சில மாதங்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு, தற்போது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
கிரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது கிரிப்டோ கரன்சி விலையினையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications