ஒரு சொகுசு கப்பலில் நீச்சல்குளம், ஜிம், ஹோட்டல், பார், உள்பட பல்வேறு விஷயங்கள் இருக்கும் என்று தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் கப்பலில் வேலை செய்த தொழிலாளி ஒருவர் தனது டிக்டாக் வீடியோவில் கப்பலில் பிணவறை, சிறை உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறியிருப்பது அனைவரையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கப்பலில் என்னென்ன மரணமும் மர்மங்கள் இருக்கிறது என்பதை கூறி இருக்கிறார் என்பதை பார்ப்போம்.
சொகுசுக்கப்பல்
ஒரு சொகுசுக்கப்பல் என்றால் அதில் ஜிம், நீச்சல்குளம், சூதாட்ட விடுதிகள், திரையரங்குகள், பார், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு முன்னாள் கப்பல் ஊழியர் இதுவரை நாம் கேள்விப்படாத சில விஷயங்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
கார்னிவல் குரூஸ்
கார்னிவல் குரூஸ் லாரன் என்ற கப்பலில் பணி புரிந்த ஊழியர் லாரன் என்பவர் ஆடம்பர சொகுசு கப்பலில் பொழுதுபோக்கு பக்கத்தை மட்டுமே அனைவரும் பார்க்கிறார்கள் என்றும், ஆனால் கப்பலுக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது டிக்டாக் வீடியோ கார்னிவல் குரூஸ் என்ற கப்பலில் உள்ள பல ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிணவறை
கார்னிவல் குரூஸ் என்ற கப்பலில் நான் பணிபுரிந்த போது சில விஷயங்களை பார்த்து முதலில் நான் அச்சமடைந்தேன். அவற்றில் ஒன்றுதான் பிணவறை. 'கப்பலில் எதிர்பாராதவிதமாக யாராவது இறந்தால் அவரை கடலில் தூக்கிப் போட்டு விடுவார்கள் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் அந்த கப்பல் கரை சேரும் வரை அந்த பிணத்தை பத்திரமாக வைத்திருக்க ஒரு பிணவறை உள்ளது என்பது எனக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். என் கண் முன்னாலேயே ஒரு பிணம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதை நான் பார்த்தேன்' என்று கூறியுள்ளார்.
சிறை
அதேபோல் சொகுசு கப்பலில் சிறையும் இருக்கும் என்பது அவர் கூறிய ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றாக உள்ளது. பயண கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் யாராவது தவறு செய்தால், அல்லது மற்றவர்களிடம் மோசமாக நடந்துகொண்டால் அவரை சிறையில் வைப்பதற்கு என ஒரு சிறிய அறை உள்ளது என்றும் அதில் தவறு செய்யும் பயணியை பூட்டி வைக்க கப்பல் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
13வது அறை
மேலும் லாரன் கூறிய இன்னொரு விஷயம் பெரும் ஆச்சரியத்திற்குரியது. பொதுவாக மேல் நாட்டவர்களுக்கு 13 என்ற நம்பர் என்றாலே அச்சத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் தெரிந்ததே. அதேபோல் கப்பலில் எந்த ஒரு தளத்திலும் 13வத் எண் அறை இல்லை என்று அவர் கூறியுள்ளார். 12வது அறைக்கு பிறகு 14வது அறை தான் இருக்கும் என்றும் இது மூட நம்பிக்கையாக இருந்தாலும் இது கிட்டத்தட்ட அனைத்து சொகுசு கப்பல்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
டிக்டாக் வீடியோ
கப்பலில் இருக்கும் ஆச்சரியமான விஷயங்களை அவர் தெரிவித்துள்ளதை அடுத்து அவரது டிக் டாக் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications