டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை கைப்பற்றிய நிகழ்வை இந்த உலகம் அத்தனை எளிதாக மறந்து விடாது. எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய உடனே அதன் நிர்வாகத்தில் பல மாற்றங்களை அவர் கொண்டு வந்தார்.
எலான் மஸ்க்: எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய உடனே அதன் பெயரை எக்ஸ் என மாற்றம் செய்தார். இதனை அடுத்து டிவிட்டர் நிறுவனத்தில் முன்னணி பதவிகளில் வேலை செய்து வந்தவர்களை எல்லாம் படிப்படியாக வேலையில் இருந்து நீக்கினார். அப்படி எலான் மஸ்க்கால் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர் தான் இந்தியாவை சேர்ந்தவரும் டெக் துறை நிபுணருமான பராக் அக்ரவால்.

பராக் அகர்வால்: அந்த சமயத்தில் பராக் அகர்வால் டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தார். பராக் அக்ரவால் போன்ற ஒரு திறமையான நபரை வேலையில் இருந்து நீக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பராக் அக்ரவால் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்திருக்கிறார்.
ஏஐ நிறுவனம்: Parallel Web Systems என்ற ஏஐ நிறுவனத்தை அவர் சொந்தமாக தொடங்கி இருக்கிறார் . உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது .இந்த நிலையில் பராக் அகர்வால் தனக்கென சொந்தமாக ஒரு ஏஐ நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
மீண்டு வந்த பராக்: Parallel Web Systems என்ற பெயரில் அவர் தொடங்கி இருக்கக்கூடிய இந்த நிறுவனம் ஏஐ செயலிகள், கருவிகள் ஆன்லைனின் ஆன்லைன் ஆய்வுகளை வேகமாகவும் துல்லியமாகவும் நடத்துவதற்கு உதவக்கூடிய வகையில் கிளவுட் பிளாட்பார்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பராக் அக்ரவால் Parallel Web Systems நிறுவனத்தை தொடங்கி விட்டார் . 25 பேரை பணிக்கு அமர்த்தி அவர் படிப்படியாக நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்.
வேகமான வளர்ச்சி: இவருடைய நிறுவனத்தில் பல்வேறு பெரிய முதலீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கின்றன . கிட்டத்தட்ட 30 மில்லியன் டாலர்கள் வரை இவர் திரட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பாரலல் டெக்னாலஜி நிறுவனம் பல்வேறு ஆன்லைன் ஆய்வுகளை தொடங்கி விட்டதாம். வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஏஐ நிறுவனமாக தன்னுடைய நிறுவனம் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
ஏஐ கருவிகளுக்கு ஆன்லைன் ஆய்வுகளுக்கு தேவையான நிகழ் நேர தரவுகளை தன்னுடைய நிறுவனம் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு நிமிடத்தில் ஏஐ கருவிகள் ஆன்லைன் ஆய்வுகளை முடிக்கு வகையில் தங்கள் ஏஐ செயலி செயல்படுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications