ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயரை அறிவித்துள்ளார். "Parallel Web Systems" என்ற இந்தப் பெயர் இதுவரை அறியப்படாமல் இருந்த நிலையில் தனது லிங்க்டின்-இல் நிறுவனத்தின் பெயரை சேர்த்துள்ளார். பாராக் அகர்வால் எப்போது தனது லிங்க்டின் ப்ரொபைலில் தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயரை சேர்த்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 2024-ஆம் ஆண்டு முதல் இவர் தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கான முயற்சியில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.
The Information-இன் ஜனவரி மாத அறிக்கையின்படி, அக்ரவால் நிறுவனத்திற்கு சுமார் $30 மில்லியன் நிதி திரட்டியுள்ளார். நிறுவனத்தின் மூலதன செயல்பாட்டிற்கு ஆதரவளித்தவர்களில் கோஸ்லா வென்ச்சர்ஸ், இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ரவுண்ட் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் அடங்கும்

நிறுவனத்தின் லிங்க்டின் பக்கத்தில், 10 பேர் பணியாற்றுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்திற்கான API-ஐ வெப் டேட்டாவைப் பயன்படுத்தி உருவாக்க உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. Parallel Web Systems இணையதளம் வேறு எந்த விவரங்களையும் கொண்டிருக்கவில்லை.
நிறுவனம் கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் அமைந்துள்ளது. இருப்பினும், சேவை பிரிவு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு முகவரியை பட்டியலிடுகிறது. இது ட்விட்டரின் முன்னாள் அலுவலகமான X-க்கு சிறிய தூரத்தில் உள்ளது. நிறுவன தாக்கல் ஆவணங்கள், அக்ரவால் ஒரு நிறுவன அதிகாரியாக இருக்கும் Shapley Inc. என்ற நிறுவனத்தின் அதே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. அக்ரவால் எப்போது இணையதள டொமைனை பதிவு செய்தார் என்பதும் தெளிவாக தெரியவில்லை.
ட்விட்டர் முதல் AI வரை: அக்ரவால் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நவம்பர் 2021-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2022-ஆம் ஆண்டு வரை இருந்தார். அப்போது எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அவரை பணியிலிருந்து நீக்கினார்.
கர்ட் வாக்னரின் "பேட்டில் ஃபார் தி பேர்ட்" புத்தகத்தின்படி, ட்விட்டரை வாங்குவதற்கு மஸ்க் $44 பில்லியன் கொடுத்து ஒப்பந்தத்தை முடித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதற்கு முன், அவரது தனியார் ஜெட் தொடர்பான ட்விட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்று அக்ரவாலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்ரவால் இந்த கோரிக்கையை மறுத்தார். இதையடுத்து, மஸ்க் ட்விட்டரின் பங்குகளை வாங்கத் தொடங்கினார். 9.2% பங்குகளை வாங்கி ஏப்ரல் 2022-க்குள் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரரானார் எலான் மஸ்க் .
அதன் பிறகு எலான் மஸ்க் அக்டோபர் 2022-ஆம் ஆண்டு ட்விட்டரை கையகப்படுத்தினார். பிறகு தனது முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிர்வாகியான விஜயா காடே, பொது ஆலோசகர் சீன் எட்ஜெட், தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் ஆகியோரை ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்தார்
முன்னாள் ட்விட்டர் தலைவரும் மற்ற மூன்று முன்னாள் நிர்வாகிகளும் மார்ச் மாதம் மஸ்க்கிற்கு எதிராக $128 மில்லியன் சம்பளம் வழங்கவில்லை என்று மஸ்கிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் தற்போது பராக் அகர்வால் தொடங்கி இருக்கும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் எலான் மஸ்கின் நிறுவனங்களோடு போட்டியிடுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications