சோமேட்டோவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சுரோபி தாஸ், சோமேட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயலுடன் இணைந்து எல்ஏடி ஏரோஸ்பேஸ் (LAT Aerospace)என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், பிராந்திய இணைப்பை மையமாகக் கொண்டு, 24 இருக்கைகள் வரை கொண்ட குறைந்த விலை எஸ்டிஓஎல் விமானங்களை தயாரிக்க உள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தீபிந்தர் கோயல் 2 கோடி டாலர் முதலீடு செய்துள்ளதாக தகவல்.
இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தீபிந்தர் கோயல் மற்றும் சுரோபி தாஸ் ஆகிய இருவரும் LAT Aerospace நிறுவனத்தின் நிறுவனர்கள்தான். ஆனால் நிறுவனத்தில் தீபிந்தர் கோயலின் ஈடுபாடு, முதலீடுகளை செய்வது மற்றும் நிர்வாகமற்ற பாத்திரத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வழிநடத்துவது என்ற அளவில் இருக்கும். அதேசமயம் சுரோபி தாஸ் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நடத்துவார். LAT Aerospace நிறுவனம் 5 கோடி டாலர் நிதி திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. aerodynamics, material sciences மற்றும் hybrid propulsion systems போன்ற பிரிவுகளில் பொறியாளர்களை பணியமர்த்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தன.

சுரோபி தாஸின் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் விமான டாக்ஸி நிறுவனங்களிலிருந்து வேறுபட்டது. எல்ஏடி ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1,500 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் வகையிலான விமானங்களை உருவாக்க முயற்சிக்கும். எஸ்டிஓஎல் விமானங்கள் பொதுவாக அளவில் சிறியவை மற்றும் குறைந்த ஓடுபாதையில் இந்த விமானங்களை எளிதாக புறப்படுதல் மற்றும் தரையிறங்குதலை எளிதாக செய்யலாம்.
இந்த விமானங்களை இயக்க சிக்கலான விமான நிலைய உள்கட்டமைப்பு தேவையில்லை. விமான டாக்சிகள் அல்லது விடிஓஎல் விமானங்கள் நகரத்துக்குள் போக்குவரத்து சேவையை வழங்குகின்றன. ஆனால் எஸ்டிஓஎல் விமானங்கள் நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
சுரோபி தாஸ் 2011ல் நாட்டின் முன்னணி உணவு டெலிவரி தளமான சோமேட்டோவில் தனது பணியை தொடங்கினார். சோமேட்டோவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதன் அங்கமாக இருந்த அவர், 2023 நவம்பரில் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அந்த நிறுவனத்தில் தலைமை பணியாளராகவும் பணியாற்றினார். சோமேட்டோவில் இணைவதற்கு முன் தாஸ் பெய்ன் அண்ட் கம்பெனியில் ஆலோசகராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications