சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் மோசடிகள் அதிகரித்துவிட்டன. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சாதனங்களைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாகிவிட்டது. அதன் அடிப்படையில் உங்கள் வீட்டு நெட்வொர்க்கைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. சைபர் க்ரைம் மோசடிகள் மற்றும் வைரஸ்கள் போன்றவற்றிலிருந்து உங்கள் வீட்டு நெட்வொர்க்கைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் வீட்டு நெட்வொர்க்கை பாதுகாக்க நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ட்ராங் பாஸ்வேர்டுகள்: உங்கள் வீட்டு வைஃபை நெட்வொர்க்கிற்கு ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்து வையுங்கள். 123456 அல்லது ABCD போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்ட்களைத் தவிர்க்கவும். உதாரணமாக கேப்பிட்டல் லெட்டர் மற்றும் ஸ்மால் லெட்டர்களைக் கொண்டு பாஸ்வோர்ட்களைப் போடவும். நீங்கள் அதில் நம்பர்கள் மற்றும் ஏதேனும் சிம்பல்களையும் சேர்த்து தனித்துவமான பாஸ்வேர்டை உருவாக்கலாம். கூடுதலாக ரூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் கேஜெட்கள் போன்ற அனைத்து நெட்வொர்க் சாதனங்களிலும் உங்களுடைய பாஸ்வேர்டை மாதத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்யவும்.
நெட்வொர்க் செயல்பாட்டை கண்காணிக்கவும்: உங்கள் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களைத் தொடர்ந்து சரி பார்க்கவும். நீங்கள் வைஃபை நெட்வொர்க் உடன் கனெக்ட் செய்யப்பட்ட சாதனங்களின் பட்டியலில் ஏதேனும், மாற்றங்கள் நடந்துள்ளனவா.. என்பதைக் கண்காணியுங்கள். அறிமுகமில்லாத ஏதேனும் டிவைஸ்கள் உங்கள் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். அதேபோல உங்கள் வீட்டு உறுப்பினர்களுக்கும் வைஃபை நெட்வொர்க் பாஸ்வேர்ட் பற்றிய தகவல்களை கற்றுக் கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அடிப்படை பாதுகாப்பை புரிந்து கொண்டு நடந்துக் கொள்கின்றனரா என்பதை உறுதி செயுங்கள். சந்தேகத்திற்கு இடமான எந்த விதமான பிஷ்ஷிங் லிங்குகளையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
சாப்ட்வேர் அப்டேட்கள்: உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய அடிக்கடி சாப்ட்வேர் அப்டேட்களை வெளியிடுகின்றனர். எனவே உங்கள் ரூட்டரை புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்யுங்கள். முடிந்தால் ஆட்டோமேட்டிக் அப்டேட்டுகளை வைத்து இயக்கவும். இதே போல நீங்கள் இணைத்துள்ள அனைத்து சாதனங்களிலும் உங்களின் பயன்பாடுகள் சமீபத்திய அப்டேட்களுக்கு உட்பட்டு உள்ளனவா என்பதை தெரிந்து கொள்ளவும்.
ரிமோட் மேனேஜ்மென்ட்: ரிமோட் மேனேஜ்மென்ட் அம்சங்கள் உங்கள் ரூட்டரை எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த அனுமதிகின்றன. இந்த அம்சத்தை சைபர் கிரிமினல்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இந்த அம்சம் உங்களுக்கு முற்றிலும் தேவையில்லை என்றால் அதனை டிசேபிள் செய்து வைத்திருப்பது சிறந்தது.
தொடர்ந்து மோசடிகள் நடந்து கொண்டிருப்பதால் அதற்கான தீர்வுகள் குறித்து அறிந்திருப்பது பாதுகாப்பான நெட்ஒர்க்கைப் பராமரிப்பதற்கு உதவியாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications