அமெரிக்க கார்ப்பரேட் உலகில் இந்தியர்கள் அசத்தி வரும் வேளையில், அடுத்த மகுடமாக திங்கட்கிழமை மாலை அந்நாட்டின் பிரபல மீடியா நிறுவனமான பாக்ஸ் கார்ப் தனது ஸ்ட்ரீமிங் டிவி சேவையான TUBI-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக அஞ்சலி சுட் என்பவரை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அஞ்சலி சுட் இதற்கு முன்பு வீடியோ ஷேரிங் தளமான Vimeo நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
இலவச ஸ்ட்ரீமிங் டிவி சேவையான TUBI-யின் தலைவராக செப்டம்பர் 1 ஆம் தேதி அஞ்சலி சுட் தனது பணியை துவங்க உள்ளார். இப்பதவியில் இதற்கு முன்பு இருந்தது TUBI-யின் நிறுவனர் Farhad Massoudi, மேலும் அஞ்சலி தற்போது TUBI மீடியா குரூப் சிஇஓ Paul Cheesbrough கீழ் பணியாற்ற உள்ளார்.

வீமியோ - Vimeo என்னும் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தில் சுமார் 9 வருடம் தலைமை பொறுப்பில் பணியாற்றி வந்த அஞ்சலி சுட் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தான் தற்போது TUBI-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக அஞ்சலி சுட் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வீமியோ-க்கு முன்பு டைம் வார்னர் மற்றும் அமேசான்.காம் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
இதன் மூலம் பாக்ஸ் கார்ப் பங்குகள் அதிகரித்துள்ளது, ஏப்ரல் மாதத்தில் தான் FOX குரூப் TUBI மீடியா குரூப்-ஐ தனியாக பிரித்து அதிகப்படியான முதலீட்டையும், கவனத்தையும் ஈர்த்தது. அமெரிக்காவில் அதிகப்படியானோர் பார்க்கும் டிவி ஸ்ட்ரீமீங் சேவையாக TUBI உள்ளது, இந்நிறுவனம் 2014ல் உருவாக்கப்பட்டு, 2020ல் FOX GROUP சுமார் 440 மில்லியன் டாலருக்கு வாங்கியது.


Click it and Unblock the Notifications