தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனம் சுமார் 1600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் காஞ்சிபுரம் தொழிற்சாலையில் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களுக்கான புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது.
இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் முன்னிலையில் Hon Hai Technology Group மற்றும் Guidance TN மத்தியில் Letter of Intent கையெழுத்தானது. இந்த தொழிற்சாலையின் மூலம் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சரான டி ஆர் பி ராஜா இதை ஒரு சாதனை திட்டம் என கூறியுள்ளார்.

தைவான் நாட்டின் பாக்ஸ்கான் தொடர்ச்சியாக முதலீடு செய்து தமிழ்நாட்டில் விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான சிறந்த தேர்வாக தமிழ்நாடு உள்ளது என்பதற்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொடர் முதலீடு சான்றாகும். இது தமிழ்நாட்டு மாநிலத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
2022-23 ஆம் ஆண்டில் 5.3 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார் என டி ஆர் பி ராஜா கூறினார்.

தமிழ்நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் முன்மொழியப்பட்டு உள்ள வேளையில், பல முதலீடுகள் வர உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் தற்போது இருப்பது மட்டுமல்லாமல், வரவிருக்கும் ஆண்டுகளில் அதன் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என டி ஆர் பி ராஜா கூறினார்.
இதோடு அதிகப்படியான ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் நிறுவனங்கள் இருக்கும் காரணத்தால் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில் தற்போது ஓலா எலக்ட்ரிக் மற்றும் பிற பேட்டரி உற்பத்தியாளர்கள் அடுத்தடுத்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து உற்பத்தியை கடைகளை அமைத்து வருவதால், தமிழ்நாடு இந்தியாவின் EV தலைநகராகவும் உருவெடுத்துள்ளது.

More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications