இந்தியாவிலேயே எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு நடப்பு நிதியாண்டில் 11 மாதத்தில் மட்டுமே 8.44 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2வது இடத்தில் இருக்கும் உத்தர பிரதேசம் 3.92 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்காக ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சென்னையில் பாக்ஸ்கான் அடுத்தடுத்து விரிவாக்க பணிகளைச் செய்து வருகிறது.

இதனால் அடுத்த 5 வருடத்தில் மாநிலத்தின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி 50 சதவீதம் வரையில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இதனால் என்ன லாபம் என எளிதாக கேட்டுவிட முடியாது. காரணம் 50000 பேருக்கு நிரந்தரமாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிலையில் பாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை வளாகத்திற்குள்ளேயே 20000 ஊழியர்கள் தங்கும் 2வது விடுதி கட்டும் பணிகளை துவங்கியுள்ளது, ஏற்கனவே இதேபோன்ற 20000 ஊழியர்கள் தங்கும் விடுதியைக் கட்டி தற்போது இறுதி பணிகள் நடந்து வரும் வேளையில், தற்போது 2வது விடுதி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பாக்ஸ்கான் பெங்களூரில் எவ்வளவு பெரிய தொழிற்சாலையைக் கட்டினாலும் சென்னை தான் அதன் பேஸ்மென்ட், பிற அனைத்து தொழிற்சாலைகளும், சென்னை தொழிற்சாலைக்கு உதவுவதற்காகவே கட்டப்பட்டு வருகிறது. தற்போது பாக்ஸ்கான் சென்னை மாம்பாக்கம் சிப்காட்டில் 20000 ஊழியர்கள் தங்குவதற்கான விடுதியைக் கட்டி வருகிறது.

இதேபோல் ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே ஓசூரில் விரிவாக்க பணிகளைச் செய்து வரும் வேளையில், தற்போது அங்கு மிகப்பெரிய டவுன்ஷிப் கட்ட உள்ளது. ஓசூரில் இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை சுமார் 22.51 லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விரிவாக்க பணிகளுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் சுமார் 4740 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்வதாக அறிவித்திருந்தது. இந்த முதலீட்டின் வாயிலாக 45000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications