மு.க.ஸ்டாலின் உடன் பாக்ஸ்கான் திடீர் சந்திப்பு.. நினைத்தது நடந்துவிடும் போலிருக்கே..!!

இந்தியா எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையை தலைகீழாக மாற்றிய தைவான் நாட்டின் பாக்ஸ்கான், அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்லும் திட்டத்தின் பெரும் தடையாக இருந்த வேதாந்தா நிறுவனத்தை கூட்டணியை உடைத்து வெளியேறிய நிலையில் தற்போது தனியாக இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

குஜராத்தில் வேதாந்தா கூட்டணியில் பாக்ஸ்கான் தொழிற்சாலை அமைக்கும் கைவிடப்பட்ட நாளில் இருந்து, இந்த மாபெரும் தொழிற்சாலை தமிழ்நாடுக்கு வர வாய்ப்பு உள்ளது என தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்தது. இந்த கணிப்பிற்கு ஏற்ப முக்கியமான சந்திப்பு இன்று நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மு.க.ஸ்டாலின் உடன் பாக்ஸ்கான் திடீர் சந்திப்பு.. நினைத்தது நடந்துவிடும் போலிருக்கே..!!

தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் என்னும் FII நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு இன்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த கூட்டம் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து இருப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இதேவேளையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே மாறும் அசம்பிளி கட்டமைப்பும், அதன் விரிவாக்க பணிகளும் பாக்ஸ்கானில் நடந்து வருகிறது. ஆனால் இந்த சந்திப்பு செமிகண்டக்டர் தொழிற்சாலை தொடர்பாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு இது மாபெரும் ஜாக்பாட், ஏற்றுமதியில் புதிய உச்சத்தை எட்ட முடியும்.

வேதாந்தா கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம் கடந்த ஒரு வாரமாக தைவான் நாட்டின் மிகப்பெரிய செமிகண்டக்டர் நிறுவனமாக இருக்கும் TSMS உடனும், ஜப்பான் நாட்டின் TMH குரூப் உடனும் தொழில்நுட்ப உதவிக்காகவும், கூட்டணியை உருவாக்கி இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்கவும், இயக்குவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக 2 நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

வேதாந்தா கூட்டணி உடைந்த பின்பு பாக்ஸ்கான் மத்திய அரசிடம் இந்தியாவில் குறைந்தது 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசிடம் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி தளத்தை அமைக்க தொழில்நுட்ப கூட்டணியை பெற்ற பின்பு உரிய மானியத்துடன் தொழிற்சாலை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+