உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக இருக்கும் அமெரிக்காவின் ஆப்பிள் அடுத்த சில மாதத்தில் உலகம் முழுவதும் அறிமுகம் செய்ய உள்ள iPhone 15 ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் குறிப்பாக சென்னையில் துவங்கியுள்ளது.
ஏற்கனவே சீனாவில் பெரும் பகுதி உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றப்பட்டு உள்ள நிலையில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஐபோன் 15 சென்னையில் தயாரிக்கப்படுவது இந்திய உற்பத்தி சந்தைக்கு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போன்கள் தான் தயாரிக்கப்படும், ஆனால் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படாத மொபைல்-ஐ இந்தியாவில் ஆப்பிள் மற்றம் பாக்ஸ்கான் தயாரிக்கிறது .
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை அதிகரித்தது மட்டும் அல்லாமல் ஐபோன் 15 சீரியஸ் போன்-ஐ தயாரிக்க துவங்கியது மூலம் ஆப்பிள் - சீனா மத்தியிலான விரிசல் எப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் ஆப்பிள் இனி தனது சர்வதேச வர்த்தகத்தை சென்னையை நம்பி நடத்த உள்ளது.
சென்னைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் அசம்பிளி தொழிற்சாலையில் இப்புதிய ஐபோன் 15 தயாரிக்க துவங்க உள்ளது. இந்தியாவில் எவ்வளவு ஐபோன் தயாரிக்க வேண்டும் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு தயாரிக்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில்..
சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ஐபோன் 15 ஏற்றுமதி செய்யத் தொடங்கிய சில வாரங்களிலேயே புதிய ஐபோன் 15-ஐ சென்னையில் தயாரிக்கும் பணிகளை பாக்ஸ்கான் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து புதிய ஐபோன்களின் உற்பத்தி அளவை விரைவாக அதிகரிக்க ஆப்பிள் முயற்சி செய்து வருகிறது.
ஐபோன் 14 ஸ்மார்ட்போன்-க்கு முன்பு, ஆப்பிள் இந்தியாவில் அதன் ஐபோன் அசெம்பிளியின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வைத்திருந்தது. ஆனால் கடந்த 2 வருடத்தில் இந்தியாவில் இருந்து தனது உற்பத்தியை பல மடங்கு அதிகரித்து தற்போது சீனா-வை மொத்தமாக கைவிடும் பாதையில் ஆப்பிள் இயங்கி வருகிறது.
சீனாவின் உற்பத்தி கடந்த 6 முதல் 9 மாதங்களில் கணிசமாக சரிவடைந்துள்ளது. மேலும் மார்ச் மாத இறுதியில் ஆப்பிள் அதன் 7% ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்தது. இந்த ஆண்டு இலக்கு இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஏற்றுமதி அளவுகளை சமன் செய்ய வேண்டும் என்பது தான்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications