இந்தியா குட்டி சீனாவாக மாறி வரும் வேளையில், ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும், தயாரிப்பிலும் வேகமாக முன்னேறி வருகிறது. இதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வந்த நிலையில், தற்போது பல மாநிலங்கள் இப்பிரிவு வர்த்தகத்தின் ஆதிக்கத்தை பங்குப்போட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம், சமீப காலமாக தனது உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை வேகமாக விரிவாக்கம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் இத்தொழிற்சாலையில் வெறும் 8-9 மாதங்களில் சுமார் 30,000 ஊழியர்களை பணியமர்த்தி புதிய சாதனையை படைத்துள்ளது பாக்ஸ்கான். இது இந்தியாவில் இதுவரை எந்தொரு நிறுவனமும் செய்திடாத வகையில் வேகமான தொழிற்சாலை விரிவாக்கமாகும்.
ஆப்பிள் நிறுவனம் சீனாவுக்கு அடுத்தாக இந்தியாவில் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் வாயிலாக சென்னையில் இருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வரும் வேளையில் தற்போது பெங்களூரில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தொழிற்சாலையை சுமார் 20000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்து உற்பத்தி பணிகள் வேகமெடுக்க துவங்கியுள்ளது.
இந்த தொழிற்சாலையில் பணியாற்றுவோரில் 80 சதவீதம் பெண் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலும் 19-24 வயது இளைஞர்கள். இவர்களில் பலர் முதல் முறையாக வேலைக்கு செல்பவர்கள். பெண்கள் 80 சதவீதம் என்பதால் இது இந்தியாவின் ஒரே இடத்தில் அதிக பெண் ஊழியர்கள் கொண்ட தொழிற்சாலையாகவும் இத்தொழிற்சாலை உருவெடுக்கலாம்.
மேலும் தேவனஹள்ளி தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதன் நிர்வாகம் இலவச தங்குமிடம், குறைவான விலையில் உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் சராசரியாக மாத சம்பளமாக ரூ.18,000 கொடுக்கப்படுவதாகவும் தெரிகிறது.

இத்தொழிற்சாலை ஏப்ரல்-மே மாதங்களில் சோதனை உற்பத்தியை தொடங்கி, ஐபோன் 16 மாடல்களை உற்பத்தி செய்தது, தற்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் உற்பத்தி நடக்கிறது. இத்தொழிற்சாலையின் உற்பத்தியில் 80 சதவீதம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு இத்தொழிற்சாலை முழு உற்பத்திதிறனை அடையும் போது 50,000 ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 41,000 ஊழியர்கள் உள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கையை பெங்களூர் தொழிற்சாலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications