செமிகண்டக்டர் தொழிற்சாலை.. வேதாந்தா அகர்வாலை கைவிட்ட பாக்ஸ்கான்.. நெக்ஸ்ட் தமிழ்நாடு?

தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் வேதாந்தா குழுமத்துடன் இணைந்து செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க கூட்டணி அமைத்தது. தற்போது இக்கூட்டணியில் இருந்து விலகுவதாக பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.

வேதாந்தா - பாக்ஸ்கான் இணைந்து உருவாக்கிய கூட்டணியில் இருந்து தங்களுடைய பெயரை நீக்குவதற்கான பணிகளை செய்துவருவதாக பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. தற்போது கூட்டணி நிறுவனம் முழுமையாக வேதாந்தா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

செமிகண்டக்டர் தொழிற்சாலை.. வேதாந்தா அகர்வாலை கைவிட்ட பாக்ஸ்கான்.. நெக்ஸ்ட் தமிழ்நாடு?

வேதாந்தா - பாக்ஸ்கான் கடந்த வருடம் குஜராத்தில் 1.54 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் மாபெரும் கணக்கு திட்டத்தில் இது மிகவும் முக்கிய படியாக இருக்கும் என அனைவரும் நம்பினர்.

குஜராத்தில் டோலேரா பகுதியில் இந்த மாபெரும் 1.54 லட்சம் கோடி ரூபாய் மத்திப்பிலான தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இக்கூட்டணிக்கு அரசின் மானியத்தை பெறுவதற்கான விதிமுறைகளை முழுமையாக பின்பற்றாத காரணத்தால் மானியங்களுக்கான ஒப்புதல் பெற தாமதமானது. இதை தொடர்ந்து திருத்தங்கள் செய்து மீண்டும் மானியத்திற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பித்த போதும் தோல்வி அடைந்தது.

அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் தனது தாய் நிறுவனமான Volcan Investments Limited கீழ் இயங்கி வந்த டிவின் ஸ்டார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாக வேதாந்தா குழுமம் கைப்பற்றும் போதே பாக்ஸ்கான் கூட்டணியில் இருந்து விலகும் என்று பலரும் கணித்த நிலலையில் தற்போது அறிவிப்புகள் வெளியாக துவங்கியது.

இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலைகளை அமைப்பதற்காக தைவான் நாட்டின் பாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா குழுமம் இணைந்தது. இதற்காக வேதாந்தா குழுமத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் Twin Star Technologies.

இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்தில் வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி தோல்வி அடைந்தாலும், பாஸ்கான் இத்துறை முதலீட்டில் இருந்து வெளியேறவில்லை. செமிகண்டக்டர் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்கும் திட்டத்தை பாக்ஸ்கான் அறிவித்த உடன் முதலில் அணுகியது தமிழ்நாடு அரசு தான்.

செமிகண்டக்டர் தொழிற்சாலை.. வேதாந்தா அகர்வாலை கைவிட்ட பாக்ஸ்கான்.. நெக்ஸ்ட் தமிழ்நாடு?

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் தனது செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதேவேளையில் டாடா குழுமமும் OSAT தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு உள்ளது, மணப்பாறை சிப்காட் பகுதியில் டாடா குழுமத்தின் டாடா ப்ராஜெக்ட்ஸ் இந்த 283 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு இருக்கும் ஜாக்பாட் வாய்ப்பு டாடா குழுமத்துடன் இணைந்து மணப்பாறை சிப்காட்-ல் தொழிற்சாலை அமைப்பது. இதுமட்டும் நடந்துவிட்டால் தமிழ்நாட்டுக்கு ராஜயோகம், இதற்கு ஏற்றார் போல் தமிழ்நாட்டில் இரு நிறுவனமும் தொழிற்சாலைகளை வைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+