இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், நாட்டின் உற்பத்தி துறைக்கும், ஏற்றுமதிக்கும் முக்கியமானதாக மாறி வருகிறது எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறை. சீனாவுக்கு இணையாக இத்துறையில் வளர்ச்சி அடையும், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கப்போவது, செமிகண்டக்டர் தான்.
இந்தியாவில் இத்துறை நிறுவனங்கள் இல்லாத நிலையில் டாடா குழுமம் ஏற்கனவே 2 தொழிற்சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து PLI திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற்றுள்ள வேளையில், இதை தொடர்ந்து கடந்த 8 மாதமாக ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இணைந்து முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யங் லியு இந்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளார். யங் லியு-க்கு இந்த ஆண்டு 75ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதை டெல்லியில் உள்ள தாய்பே அசோசியேஷன் இயக்குநர் ஜெனரல் மன்ஹர்சிங் யாதவ் அவர்களிடமிருந்து ஜூலை 4ஆம் தேதி தாய்பே-யில் பத்ம பூஷண் விருதை யங் லியு பெற்றுக்கொண்டார்.
இந்த வருதை பெற்ற அவர் விரைவில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து யங் லியு தலைமையிலான பாக்ஸ்கான் இந்தியாவில் நடக்கும் முக்கியமான திட்டங்கள் குறித்து இறுதி முடிவுகள் வெளியாக உள்ளது. இதில் முக்கியமாக ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் திட்டம் இருக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் குழுமம் ஆகியவை இந்தியாவில் இணைந்து சிப் அசெம்பிளி யூனிட்டை அதாவது OSAT தொழிற்சாலையை நிறுவுவதற்கான திட்டத்தை மத்திய அரசிடம் சில மாதங்களுக்கு முன்பு சமர்ப்பித்தது. இது பாக்ஸ்கான், அனில் அகர்வால் உடன் இணைந்து அமைக்கப்பட முடிவு செய்யப்பட்ட திட்டமாகும்.
ஆனால் ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் சமர்பித்த திட்டம் மத்திய அரசுக்கு திருப்திகரமாக இல்லை என்பதால் இது குறித்து கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் அரசு கேட்டுக்கொண்டது. இதன் பின்பு இக்கூட்டணி முயற்சிகள் குறித்து இதுவரையில் எவ்விதமான அப்டேட்-ம் இல்லை.
இந்த சூழ்நிலையில் தான் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யங் லியு இந்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய வருகை ஹெச்சிஎல் - பாக்ஸ்கான் கூட்டணி செமிகண்டக்டர் தொழிற்சாலை எங்கு அமைக்கப்படுகிறது, எவ்வளவு முதலீடு செய்யப்போகிறது போன்ற முக்கியமான விஷயங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், இந்நிறுவனத்தை கம்ப்யூட்டர் ஹார்டுவேர் தயாரிக்கும் திட்டத்துடன் துவங்கினாலும் பின்னாளில் இது சாப்ட்வேர் நிறுவனமாக மாறியது. இந்த நிலையில் தந்தையின் கனவை நினைவாக்கும் பொருட்டு ரோஷினி நாடார் ஏற்கனவே பல முயற்சிகளை செய்து முழுமையான வெற்றியை அடையமுடியாமல் தவித்தார். இந்த நிலையில் தான் பாக்ஸ்கான் உடனான கூட்டணி உருவாகி முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் குழுமம் இணைந்து விண்ணப்பித்த திட்டத்தின் மதிப்பு மட்டும் 10 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது, இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் PLI கீழ் இக்கூட்டணி தனது முதலீட்டுக்கு மானியங்களை பெற்ற முடியும் என்பதாலேயே மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது இக்கூட்டணி.
பாக்ஸ்கான் முயற்சிக்கு ஆரம்பத்தில் இருந்து மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுக்கிறது, இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு செமிகண்டக்டர் துறையில் PLI திட்டத்தின் கீழ் மானியம் பெற வேண்டுமெனில் இத்துறையில் அனுபவம் உள்ள நிறுவனங்கள் டெக்னாலஜி பார்ட்னராக கொண்டு வர வேண்டும் என்பது தான். அந்த வகையில் டாடா குழுமம் அமைக்கும் 2 தொழிற்சாலைக்கும் PSMC கூட்டணியை ஈர்த்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications