சென்னை: தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யங் லியு இந்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளார். டெல்லியில் உள்ள தாய்பே அசோசியேஷன் இயக்குநர் ஜெனரல் மன்ஹர்சிங் யாதவ் அவர்களிடமிருந்து ஜூலை 4ஆம் தேதி தாய்பேயில் பத்ம பூஷண் விருதை யங் லியு பெற்றுக்கொண்டார்.
யங் லியு-க்கு இந்த ஆண்டு 75ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திப்பதற்காகவும், இந்தியாவில் நடந்த செமிகண்டக்டர் இந்தியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு வருடத்தில் அடுத்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் சுமார் 9-10 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை செய்துள்ளது. இந்த பயணத்தில் யங் லியு பாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவது, எச்.சி.எல் குழுமத்துடன் இணைந்து ஒரு சிப் ஆலையை நிறுவுவது, எலக்ட்ரிக் வாகன உற்பத்தி பிரிவைத் தொடங்குவது மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் உற்பத்தியை நிறுவுவது போன்ற பணிகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.
பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் பெரும் வளர்ச்சியைக் குறிக்கிறது.
புதிய ஐபோன் உற்பத்தி ஆலை விரிவாக்கம் மற்றும் பிற உற்பத்தி பிரிவுகள் நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
எச்.சி.எல் குழுமத்துடன் இணைந்து சிப் ஆலை நிறுவுவது இந்தியாவில் சிப் தயாரிப்பை ஊக்குவிக்கும், இது நாட்டின் தொழில்நுட்ப சுதந்திரத்திற்கு முக்கியமானது.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி பிரிவு தொடங்குவது இந்தியாவின் மின்சார வாகன சந்தைக்கு மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும். இதேபோல் இத்தொழிற்சாலை எங்கு வரப்போகிறது என்பதில் பெரும் எதர்பார்ப்பு உள்ளது. டெஸ்லா டேக்கா கொடுத்துவிட்ட நிலையில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பிரிவை ஈர்ப்பதில் பெரும் போட்டியிருக்கும்.
பாக்ஸ்கான் நிறுவன சிஇஓ யங் லியு-வின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் அடுத்த முதலீடுகள், விரிவாக்கம் என அனைத்திலும் இறுதி முடிவு எடுக்கப்படும்.
மொத்தத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கம் மற்றும் யங் லியு-வின் வருகை ஆகியவை இந்தியாவின் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தள்ளது.


Click it and Unblock the Notifications