ஃபாக்ஸ்கான்: ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை ஜனவரி 7 வரை திறக்க வாய்ப்பு இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விளங்கும் பாக்ஸ்கானின் சென்னை தொழிற்சாலையில் டிசம்பர் 18ஆம் தேதி, இந்நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் உணவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகப் பலர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்! 1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்!

இதைத் தொடர்ந்து 250க்கும் அதிகமான பெண் ஊழியர்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்த காரணத்தால் இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் பரவியது. இந்தப் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த பாக்ஸ்கான் தனது தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடியது.

 ஃபாக்ஸ்கான் நிறுவனம்

ஃபாக்ஸ்கான் நிறுவனம்

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமாக Hon Hai Precision பெயருடன் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி தொழிற்சாலையாக இருக்கும் ஃபாக்ஸ்கான் சியோமி, ஆப்பிள் எனப் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து, ஏற்றுமதி செய்து வருகிறது.

 பெண் ஊழியர்கள்

பெண் ஊழியர்கள்

இந்நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் உணவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகப் பலர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வெடித்த போராட்டத்தைக் கண்டு ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான ஆப்பிள் ஃபாக்ஸ்கான் நிர்வாகத்திற்கு முக்கியமான உத்தரவிட்டு உள்ளது.

 ஆப்பிள் உத்தரவு

ஆப்பிள் உத்தரவு

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மேம்பட்ட தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்தையும் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாக்ஸ்கான் ஆப்பிள் நிறுவனத்திற்கும் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு அரசுக்கும் உறுதி அளித்துள்ளது.

 3 நாள் தேவை

3 நாள் தேவை

ஃபாக்ஸ்கான் இன்னும் ஆப்பிள் நிறுவனத்தின் உத்தரவுகளைப் பூர்த்திச் செய்யும் பணியில் உள்ளது, இதை உறுதி செய்ய இரண்டு நாட்கள் ஆகும் என்றும், தொழிலாளர்களைத் திரும்ப அழைத்து வருவது ஒரு நாளுக்கு மேல் ஆகலாம் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி துவங்க வேண்டும் என்றால் குறைந்தது 3 நாள் ஆகும்.

 ஜனவரி 7 வரை மூடல்

ஜனவரி 7 வரை மூடல்

இந்நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி மூடப்பட்ட சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை ஜனவரி 7ஆம் தேதி வரையில் மூடப்படும் என்பது இன்றைய நிலவரத்தின் படி தெரிகிறது, மேலும் ஊழியர்கள் போராட்டத்திற்குப் பின் சீனா இருக்கலாம் எனத் தி வையர் பத்திரிக்கை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Foxconn: Chennai sriperumbudur factory unlikely to reopen until Jan 7

Foxconn: Chennai sriperumbudur factory unlikely to reopen until Jan 7 பாக்ஸ்கான்: ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை ஜனவரி 7 வரை திறக்க வாய்ப்பு இல்லை..!
Story first published: Tuesday, January 4, 2022, 21:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X