பாக்ஸ்கான் - உலகின் மிகப்பெரிய கான்டிராக்ட் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் முதலும் முக்கிய காரணமாக இருக்கும் பாக்ஸ்கான்-க்கு தனது ஐபோன் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணியில் படு பிசியாக இருக்கும் வேளையில் எதிர்காலம் என்ன..? சீனாவில் இருக்கும் மாபெரும் கட்டமைப்புக்கு என்ன தீர்வு..? போன்ற பல முக்கியமான கேள்விக்கு பதில் தேடி அழைந்து வருகிறது.
இதற்கான பதிலை அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் டாப் டூ பாட்டம் உற்பத்தி சங்கிலியில் பாக்ஸ்கான் மாஸ்காட்டி வருவது மட்டும் அல்லாமல் இத்துறையில் உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருந்தால் வேகமாக வளரும் சந்தையில் காணமல் போய் விடுவோம் என்ற திட்டத்தில் பாக்ஸ்கான் தற்போது உலகமே பெரும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு துறையில் இறங்க முடிவு செய்துள்ளது. ஆனால் தற்போது பிரச்சனை என்னவென்றால் ஆப்பிள் போன்ற ஒரு நிறுவனத்தை பிடிப்பது தான்.
பாக்ஸ்கான் நிறுவனம்
பாக்ஸ்கான் நிறுவனம் இந்த பிரிவில் தான் கிங் என்பது இல்லை, மொத்தமாக அனைத்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கான உதிரிபாகங்கள் முதல் அசம்பிளி வரையில் வித்தகர். இதேபோல் பாக்ஸ்கான் எந்த பொருளையும் சொந்தமாக தயாரித்து நேரடியாக விற்பனை செய்வது கிடையாது, அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் வேறு நிறுவனங்களுக்கு அளிப்பது தான்.
கான்டிராக்ட்
இந்த வகையில் தான் பாக்ஸ்கான் ஆப்பிள், சியோமி போன்ற பல முன்னணி பிராண்டுகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் குருவிகளை தயாரித்து கொடுக்கிறது. அந்த வகையில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்த பாக்ஸ்கான் எந்த நிறுவனத்திற்கு தயாரிக்க போகிறது என்பது தெரியாமல் மாட்டிக்கொண்டு விழிக்கிறது.
மிகப்பெரிய மாற்றம்
தைவான் நிறுவனமான பாக்ஸ்கான் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சந்தைக்குள் வருவது என்பது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவது மட்டும் அல்லாமல் போதுமான கார்களை தயாரிக்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தம்.
மல்டி பிராண்ட்
இதேபோல் பாக்ஸ்கான் ஓரே தொழிற்சாலையில் டிமாண்டுக்கு ஏற்ப பல பிராண்டுகளுக்கு கார்களை தயாரிக்கும் கட்டமைப்பை உருவாக்குவதால் ஆட்டோமொபைல் துறைக்கு பாக்ஸ்கான் ஒரு ஜாக்பாட் என்ற சொல்ல முடியும்.
மார்ச் 15 அறிவிப்பு
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாக்கான் தாய் நிறுவனமான Hon Hai Precision Industry மார்ச் 15 ஆம் தேதி தனது நிதியியல் முடிவுகளை வெளியிட உள்ள நிலையில், இக்கூட்டத்தில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி வர்த்தகம் குறித்து அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.
சப்ளை செயின்
பாக்ஸ்கான் இத்திட்டத்தில் பல வருடங்களாக இயங்கி வரும் வேளையில் EV தயாரிப்பு குறித்து அதன் ஓற்றை உத்தரவாதம் let us build your next EV என்பது தான். தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி பாக்ஸ்கான் சிப், பேட்டரி போன்ற பலவற்றுக்கு தனிப்பட்ட சப்ளை செயின்-ஐ உருவாக்கியுள்ளது.
முக்கிய அதிகாரி
மேலும் பாக்ஸ்கான் எலக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ஓஹியோ, லார்ட்ஸ்டவுன் பகுதியில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளது. மேலும் நிச்சான் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Jun Seki-ஐ நிறுவனத்தில் சேர்த்துள்ளது.
ஓஹியோ தொழிற்சாலை
ஓஹியோ தொழிற்சாலை மூலம் பாக்ஸ்கான் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் கார்களை தயாரித்து அளிக்க முடியும். இந்தியாவில் பாக்ஸ்கான் கர்நாடகாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் தளத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications