தைவான் நாட்டின் பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் 1600 கோடி ரூபாய் முதலீடு செய்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் புதிய தொழிற்சாலை அமைக்கும் செய்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பாக்ஸ்கான் அடுத்த திட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பில் அசத்தி வரும் பாக்ஸ்கான் கடந்த ஒரு வருடமாக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் திட்டத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது, முதலில் ஆப்பிள், அதன் பின் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து எல்க்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டது.

இது தோல்வி அடைந்த நிலையில் சொந்தமாக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டு இதற்கான பணிகளை செய்து வந்த நிலையில், இப்புதிய ஆட்டோமொபைல் வர்த்தகத்திற்கான தொழிற்சாலையை இந்தியா அல்லது இந்தோனேஷியாவில் அமைக்கும் திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனம் எல்க்ட்ரிக் வாகன பிளாச்பார்ம் உருவாக்கும் வர்த்தகத்திற்காக Mobility in Harmony (MIH) என்ற தனி நிறுவனத்தை துவங்கியது. இந்த நிறுவனம் 3 சீட் கொண்ட 20000 டாலருக்கும் குறைவான எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளதாக MIH நிறுவனத்தின் சிஇஓ ஜாக் செங் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
3 சீட் கொண்ட எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யவும், பயன்பாட்டில் கொண்டு வரவும் முதல் கட்டமாக பாக்ஸ்கான் நிறுவனத்தின் Mobility in Harmony (MIH) சூப்பர் மார்கெட்கள், கார் வாடகை நிறுவனம், கொரியர் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மொபிலிட்டி இன் ஹார்மோனி (MIH) வருகிற அக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டில் நடக்கும் மிகப்பெரிய ஆட்டோ டிரேட் ஷோ-வில் தனது 3 சீட் கொண்ட மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக MIH நிறுவன சிஇஓ ஜாக் செங்க் தெரிவித்தார். இந்த கார் 10000 டாலர் முதல் 20000 டாலர் விலையில் இருக்கும் என்பது தான் முக்கியமான விஷயம்.

கூகுள் எப்படி அனைத்து பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு Android operating system இயக்கும் வண்ணம் தளத்தை உருவாக்கியுள்ளதோ, பாக்ஸ்கான் தனது மொபிலிட்டி இன் ஹார்மோனி நிறுவனத்தின் வாயிலாக EV பிளாட்பார்ம்-ஐ உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு பிளாட்பார்ம்-ஐ வைத்து பல பிராண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பது தான் பாக்ஸ்கான் திட்டம்.
இதில் முதல் படி தான் 10000 டாலர் முதல் 20000 டாலர் விலையில் ஜப்பான் ஆட்டோ டிரேட் ஷோவில் அறிமுகம் செய்ய உள்ள 3 சீட் கொண்ட மலிவு விலை எலக்ட்ரிக் கார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications