உலகம் முழுவதிலும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் இதேவேளையில் அதிகளவில் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளது. இதனால் இத்துறை வர்த்தக வளர்ச்சியின் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தான் ஆட்டோமொபைல் அல்லாத ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குக் கார்களை உற்பத்தி செய்து கொடுக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிக்கப் பல தொழிற்சாலைகளை வைத்துள்ள நிலையில் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையையும் தமிழ்நாட்டில் அமைக்கத் திட்டமிட்டு உள்ளது.
பாக்ஸ்கான்
தைவான் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், சீனாவிற்குப் பின்பு ஆசிய உற்பத்தி விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்தும் முக்கியமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது.
பாக்ஸ்ட்ரான் (Foxtron)
பாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற மாபெரும் இலக்குடன், இப்பிரிவுக்காகவே பாக்ஸ்ட்ரான் (Foxtron) நிறுவனத்தைத் துவங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா தொடர்ந்து Foxtron வாயிலாக இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தைக் கட்டமைத்து வருகிறது.
சென்னை
தற்போது பாக்ஸ்கான் சென்னைக்கு அருகில் ஒரு தொழிற்சாலையும், பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய கிளையான பார்த் FIH நிறுவனத்தின் கீழ் ஒரு நிறுவனம் என இரு தொழிற்சாலைகளில் ஆப்பிள், சியோமி உட்படப் பல பிராண்டுகளுக்கான ஸ்மார்ட்போன்-ஐ தயாரித்து வருகிறது.
எலக்ட்ரிக் வாகனங்கள்
மேலும் பாக்ஸ்கான் தற்போது ஸ்மார்ட்போன் தாண்டி எலக்ட்ரிக் வாகனங்கள் உட்படப் பல பொருட்களைத் தயாரிக்கப் புதிய வாடிக்கையாளர்களைத் தேடி வருகிறது. இதேவேளையில் பாக்ஸ்கான் குரூப்-ன் முதலீட்டுக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.
Fisker-க்கு ஹைப்ரிட் EV கார்
கடந்த வருடம் பாக்ஸ்கான் அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஒப்பந்த முறையில் தயாரித்துக் கொடுக்க ஒரு கார் தயாரிப்பு தொழிற்சாலையைக் கைப்பற்றியது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து தற்போது பாக்ஸ்கான் Fisker என்னும் பிராண்டுக்கு ஹைப்ரிட் எலக்ட்ரிக் கார் தயாரித்துக் கொடுக்கிறது.
3ஆம் தரப்பு ஒப்பந்தம்
இந்த மாடலை தான் தற்போது பாக்ஸ்கான் இந்தியாவிலும் செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. 3ஆம் தரப்பு ஒப்பந்தம் அடிப்படையில் எப்படி ஆப்பிள் நிறுவனத்திற்குப் பாக்ஸ்கான் ஸ்மார்ட்போன் தயாரித்துக் கொடுக்கிறதோ, அதேபோல் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது பாக்ஸ்கான். சமீபத்தில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி தயாரிப்பு
பாக்ஸ்கான் ஜூன் 15ஆம் தேதி தனது முதல் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையைத் தென் தைவான் பகுதியில் இருக்கும் Kaohsiung-ல் துவங்கியது. எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் சொந்தமாகப் பேட்டரி தொழிற்சாலையைத் துவங்கியது மூலம் அதன் நீண்ட காலத் திட்டத்தைப் பார்க்க முடிகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications